பரபரப்பான வாழ்க்கை முறையில் மனிதன் தன்னுடைய உடல் நலனில் முழுமையான அக்கறை நிறுத்த முடிவதில்லை. நாள் முழுவதும் அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு பணி செய்வதால் உடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது. இதன் காரணமாக பல்வேறு வியாதிகள் மற்றும் அதன் தொடர்புடைய உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது.
அதில் உடல் பருமன் மிகப்பெரிய பாதிப்பையும் மற்றும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. உடற்பயிற்சியற்ற வாழ்க்கை முறை, துரித உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் உடல் பருமன் ஏற்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் நீண்ட நேரம் நடக்க இயலாமை, நிற்க இயலாமை மற்றும் முதுகு வலி போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. இந்த உடல் பருமன் பாதிப்பை குறைப்பதற்கு பல்வேறு பயிற்சிகளை எடுத்துக்கொண்டாலும் முழுமையாக விடுபட முடிவதில்லை.
இந்நிலையில் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை எளிமையாக குறைப்பதற்கு ஜப்பானை சேர்ந்த நடிகர் மிக்கி ரியோஸ்கீ ஒரு எளிமையான வழிமுறையை உருவாக்கி உள்ளார். நடிகர் முதுகுவலிக்காக மருத்துவரிடம் சென்ற போது, அவர் இந்த மூச்சுப் பயிற்சியை சொல்லிக் கொடுக்க, அது உடல் எடை குறைக்கவும் உதவுகிறது என்பதை பின்னர் தான் உணர்ந்திருக்கிறார் மிக்கி. இந்த வழிமுறையின் மூலம் மிக எளிமையாக உடலிலுள்ள கொழுப்பை எளிதில் கரைக்க இயலும். பொதுவாக மனிதனுக்கு அதிகப்படியான கொழுப்பு தொப்பையை சேர்ந்து மிகப்பெரிய சுமையை ஏற்படுத்துகிறது. இதனை குறைக்க இந்த வழிமுறை மிகவும் பயனுள்ளதாக அமையும்.
இந்த பயிற்சியை செய்ய நேராக நின்று மூன்று வினாடிகள் மூச்சை இழுத்து பின்னர் மெதுவாக 7 வினாடிகள் மூச்சை வெளியே விட வேண்டும். இவ்வாறு இரண்டு முதல் 3 நிமிடங்கள் வரை தொடர்ந்து செய்து வந்தால் உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைவது நன்கு உணர முடியும். இந்த முறைக்கு லாங் ப்ரீத் டயட் என அழைக்கப்படுகிறது. இந்த முறையில் அதிகளவு ஆக்சிஜன் எடுத்துக் கொள்ளப்படுவதால் கொழுப்பு மூலக்கூறுகள் சிதைவடைந்து உடல் எடையை குறைக்கிறது என ஐரோப்பிய மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர். இந்த பயிற்சியின் மூலம் எளிமையாக நாம் நம்முடைய தொப்பையை குறைக்க முடியும்.
No comments:
Post a Comment