"

Friday, January 28, 2022

வரலாற்றில் இன்று ஜனவரி 28 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்

வரலாற்றில் இன்று ஜனவரி 28 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.


நிகழ்வுகள்
1547 – எட்டாம் ஹென்றியின் இறப்பு. அவனது 9 வயது மகன் ஆறாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னன் ஆனான்.
1624 – கரிபியனில் முதலாவது பிரித்தானியக் குடியேற்ற நாடான சென் கிட்ஸ் சர் தொமஸ் வார்னர் என்பவரால் அமைக்கப்பட்டது.
1679 – சென்னை கோட்டைப் பகுதியில் சிறு நிலநடுக்கம் உணரப்பட்டது.
1820 – ஃபாபியன் பெலிங்ஷோசென் தலைமையில் ரஷ்யா நாடுகாண் பயணக்குழு அண்டார்ட்டிக்காவை அடைந்தது.
1846 – அலிவால் என்ற இடத்தில் சீக்கியர்களுடன் இடம்பெற்ற போரில் சர் ஹரி ஸ்மித் தலைமையிலான பிரித்தானியப் படைகள் வெற்றி பெற்றனர்.
1882 – சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.
1909 – ஐக்கிய அமெரிக்கப் படைகள் குவாண்டானாமோ விரிகுடாவைத் தவிர்த்து கியூபாவின் மற்றைய பகுதிகளில் இருந்து விலகினர்.
1918 – பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கியை புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.
1932 – ஜப்பானியப் படைகள் ஷங்காய் நகரைத் தாக்கினர்.
1935 – ஐஸ்லாந்து கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக்கிய முதல் நாடானது.
1986 – சாலஞ்சர் மீள்விண்கலம் புறப்பட்ட 73ஆவது வினாடியில் வானில் வெடித்துச் சிதறியதில் ஏழு விண்வெளிவீரர்கள் கொல்லப்பட்டனர்.
1987 – மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் 86 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அண்டெஸ் மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்
1853, ஹொசே மார்த்தி, கியூபாவின் புரட்சியாளர் (இ. 1895)
1922 – ரொபேர்ட் ஹோலி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1993)
1925 – ராஜா ராமண்ணா, இந்திய அணுவியல் நிபுணர்.


இறப்புகள்
1939 – வில்லியம் யீட்ஸ், நோபல் பரிசு பெற்ற ஐரிஸ் எழுத்தாளர் (பி. 1865)
1996 – ஜோசப் புரொட்ஸ்கி, நோபல் பரிசு பெற்ற ரசியக் கவிஞர் (பி. 1940)
2007 – ஓ. பி. நாயர், இந்தித் திரைப்பட இசையமைப்பாளர்

No comments:

Post a Comment

Adbox