"

Sunday, March 17, 2019

தமிழ்க் கலாச்சாரத்தில் வெற்றிலைக்கு என தனி இடம் எப்போதும் உண்டு! அப்படிப்பட்ட வெற்றிலைக்கு மருத்துவ குணமும் உண்டு! இதோ அந்த மருத்துவ குணங்கள்


வெற்றிலை தொன்றுதொட்டு நாம் பயன்படுத்திவரும் மூலிகைகளுள் ஒன்று. திருமணம், சடங்கு என எல்லா மங்கல நிகழ்வுகளிலும் வெற்றிலை முக்கிய இடம் வகிக்கிறது. 

பொதுவாக, வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு, ஏலக்காய், கிராம்பு, வால்மிளகு, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, சுக்கு, காசுக்கட்டி சேர்த்து தாம்பூலம் தரிப்பது தமிழர்களின் வழக்கமாகும். விழாக்களிலும், தமிழர் விருந்துகளிலும் தவறாது இடம்பெறும் இலை. இதில் இரும்புச் சத்து, தாது உப்புகள் அதிகம்.


இலையை மிதமாக சூடு செய்து சாறு எடுத்து, இந்தச் சாறை மூக்கில் சில சொட்டுக்கள் விட்டால், தலைவலி, தலைபாரம், தும்மல் சரியாகும். வெற்றிலையுடன் சுண்ணாம்பு சேர்த்து அரைத்து, பூச்சி, தேள் கொட்டிய இடத்தின் மேல் தடவினால், வலி உடனடியாக நீங்கும்.

100 மில்லி தேங்காய் எண்ணெயுடன் ஐந்து வெற்றிலைகள் சேர்த்துக் காய்ச்சி தினமும் காலை - மாலை வேளைகளில் சொறி, சிரங்கு உள்ள இடங்களில் பூசிவந்தால் குணம் கிடைக்கும். நுரையீரல் தொடர்பான தொந்தரவுகள் ஏற்பட்டால், வெற்றிலைச் சாற்றுடன் இஞ்சிச் சாறு சேர்த்து குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்

.

அசைவ உணவுகள் உண்ணும்போதும் தாம்பூலம் தரித்தால் எளிதில் செரிமானமாகி, வயிற்றுக்கோளாறுகள் ஏற்படாமலிருக்கும். அத்துடன், வயிற்றில் வாய்வுக்கோளாறு ஏற்படாமல் தடுப்பதோடு வயிறு உப்புசம், வயிற்றுவலி போன்ற உபாதைகள் தடுக்கப்படும். மேலும், கழிவுகள் வயிற்றில் சேராமல் குடல் சுத்தப்படுத்தப்படுவதோடு, மலச்சிக்கல் ஏற்படாமலிருக்கும். வெற்றிலை, இஞ்சி, தேன் மூன்றையும் வெறும் வாயில் மென்று சாப்பிட்டால், அஜீரணக் கோளாறுகள், வயிற்றுப் பிரச்னைகள் சரியாகும்

.

வெற்றிலை, அருகம்புல், மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்தால், விஷக்கடிகள், ஃபுட் பாய்சன் போன்றவை சரியாகும்.இலையை எரித்துச் சாம்பலுடன் பசுவெண்ணெய் கலந்து நாவில் தடவினால், உச்சரிப்புக் கோளாறுகள் நீங்கி, பேச்சு தெளிவாகும்.

வெற்றிலை, ஜாதிக்காய், கிராம்பு மூன்றையும் மென்று சாப்பிட்டால், இல்லற இன்பம் கூடும். காலை வேளையில், வெற்றிலையுடன் பாக்கை அதிகமாகவும், மதியம் சுண்ணாம்பு அதிகமாகவும், மாலையில் வெற்றிலை அதிகமாகவும் சேர்த்துவந்தால், உடல் இயக்கம் சீராக இருக்கும்.

No comments:

Post a Comment

Adbox