மிக நீண்ட காலமாக மற்றவரின் குறட்டை சத்தத்தால் தூக்கத்தை தொலைத்தவர்கள் அநேகம். சில நாடுகளில் இந்த குறட்டை சத்தத்தால் கணவன்-மனைவியிடையே விவகாரம் விவாகரத்து பெறும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இன்று இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய கருவியானது "sleep இயர் பட்" என்ற ஓர் கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இந்தக் கருவியை குறட்டை விடுபவர் தனது இரண்டு காதுகளில் பொறுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பொருத்திக் கொண்ட பின்பு அவர் எப்பொழுதாவது குறட்டை உருவாக்கும் பொழுது, இந்த கருவியானது ஒரு சிறிய அதிர்வை உருவாக்கும். இந்த அதிர்வானது குறட்டை விடுபவரின் தூங்கும் நிலையை மாற்றிவிடும். அவ்வாறு மாறும்போது அவருடைய மூச்சுக்குழல் சுற்றி உள்ள தசைகள் சுருங்கி விரிந்து கொடுக்கும் இதனால் அவருடைய சுவாசம் சீரடையும் மேலும் குறட்டை சத்தம் நின்றுவிடும்.
மீண்டும் அவர் எப்பொழுது குறட்டை சத்தத்தில் எழுப்புகிறார்கள் அப்பொழுது இந்த கருவியானது மீண்டும் அதிர்வை உருவாக்கும். இவ்வாறு மாறி மாறி நடைபெறும்போது குறட்டை சத்தம் ஆனது குறைய ஆரம்பிக்கும் என் இக்கருவியை உருவாக்கியவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். மிக விரைவில் இக்கருவியானது சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இக்கருவியின் விலை தோராயமாக 6500 ரூபாய் இருக்கும் என தெரிவித்துள்ளனர். இக்கருவியானது விரைவில் இண்டிகோ இணையதளத்தில் விற்பனைக்கு வர உள்ளது.
No comments:
Post a Comment