"

Tuesday, July 2, 2019

கூட்டத்தை கண்டு அஞ்சுகிறீர்களா இனி கவலை வேண்டாம் Google map transit crowdedness prediction வந்துவிட்டது.



கூகுள் மேப் பல்வேறு புதிய தகவல்களை வழங்கி வருகிறது. சாலையில் அதிக நெரிசல் மிக்க பகுதி எது என்பதை துல்லியமாக கூகுள் மேப்பின் மூலமாக கணித்துவிட முடியும். அது போன்றே பல்வேறு புதிய வசதிகளை கூகுள் மேப் அளித்து வந்த வண்ணம் உள்ளது.பொதுவாக ரயிலில் அல்லது பஸ்ஸில் பயணம் செய்யக் கூடியவர்களுக்கு இட நெருக்கடி என்பது பெரிய தலைவலியாக உள்ளது. அவ்வாறு இடநெருக்கடி உள்ள ரயிலில் அல்லது பஸ்ஸில் பயணம் செய்யக்கூடிய நெருடல் என்பது நம்மால் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. 



தற்சமயம் அத்தகைய நெருடல்களை போக்கக் கூடிய வகையில் புதிய வசதியை செய்ய உள்ளது. அதுதான் இந்த Google map transit crowdedness prediction புதிய வசதி இதன் மூலம் பஸ்ஸிலோ அல்லது ரயிலிலோ அதிகப்படியான கூட்ட நெரிசல் உள்ள பகுதி எது என்பதை நம்மால் கூகுள் மேப்பின் மூலமாக கணித்துவிட முடியும்.  இதன் மூலம் நெரிசல் உள்ள பயணங்களை நாம் தவிர்த்து சிறப்பானதொரு பயணத்தை மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. விரைவிலேயே இந்த வசதி பயனர்களுக்கு கிடைக்கும் என தெரிகிறது.

No comments:

Post a Comment

Adbox