"

Thursday, March 29, 2018

மறுதேர்வு தமிழக மாணவர்கள் கவலை ..!


சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொருளாதரப் பாடத்திற்கும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதப் பாடத்திற்கும் மறுதேர்வு நடத்தப்படும் என  CBSC அறிவித்துள்ளது. மறுதேர்வு அறிவிக்கப்பட்ட இரு பாடங்களுக்கும் முதலில் நடத்தப்பட்ட தேர்வின் போது, வினாத்தாள் முன்கூட்டிய பல மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் கசிந்தது. 

வினாத்தாள் லீக் ஆனது டெல்லியில் மட்டும் தான், அதற்காக பிறபகுதி மாணவர்களுக்கும் மறுதேர்வு வைப்பது நியாயமற்ற செயல் என சென்னை மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.ஒருசிலர் செய்த தவறால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கபடுகின்றனர். தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும். அனைவருக்கும் மறுதேர்வு என்பதை சிபிஎஸ்இ மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாணவரின் பெற்றோர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Adbox