"

Saturday, March 16, 2019

வரலாற்றில் இன்று மார்ச் 16 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்

வரலாற்றில் இன்று மார்ச் 16 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.


நிகழ்வுகள்
கிமு 597 – பாபிலோனியர்கள் ஜெருசலேமைக் கைப்பற்றினர்.

1190 – சிலுவைப் படையினர் (Crusaders) யோர்க் நகரின் யூதர்களைப் படுகொலை செய்ய ஆரம்பித்தனர். பல யூதர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
1521 – மகலன் பிலிப்பீன்சை அடைந்தான்.
1792 – சுவீடன் மன்னன் மூன்றாம் குஸ்டாவ் சுடப்பட்டான். இவன் மார்ச் 29 இல் இறந்தான்.
1926 – முதலாவது திரவ-எரிபொருளினால் உந்தும் ஏவுகணையை மசாசுசெட்சில் ராபர்ட் கொடார்ட் என்பவர் செலுத்தினார்.
1939 – பிராக் அரண்மனையில் இருந்து ஹிட்லர் பெஹேமியா, மொராவியாவை ஜேர்மனியின் ஒரு பகுதியாக அறிவித்தார்..

1942 – முதலாவது வி-2 ஏவுகணை ஏவப்பட்டது (ஏவப்பட்ட உடனேயே வெடித்துச் சிதறியது).
1945 – இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை முடிவுக்கு வந்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் 20-நிமிடக் குண்டுவீச்சில் ஜெர்மனியின் வூர்ஸ்பேர்க் நகரின் 90 விழுக்காடு அழிந்தது. 5,000 பேர் கொல்லப்பட்டனர்.
1962 – மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க விமானம் 107 பயணிகளுடன் காணாமல் போனது.
1963 – பாலியில் ஆகூங்க் மலை நெருப்பு கக்கி 11,000 பேர் வரை இறந்தனர்.
1966 – ஜெமினி 8, நாசாவின் 12வது மனிதரைக் கொண்டுசென்ற விண்கலம், ஏவப்பட்டது.
1968 – வியட்நாம் போர்: மை லாய் என்ற இடத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 350 முதல் 500 வரையிலான வியட்நாமியர்கள் அமெரிக்கப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1969 – வெனிசுவேலாவில் உள்ளூர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 155 பேர் கொல்லப்பட்டனர்.
1985 – அசோசியேட்டட் பிரஸ் ஊடகவியலாளர் டெரி ஆன்டர்சன் பெய்ரூட் நகரில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் டிசம்பர் 4, 1991 இல் விடுதலை ஆனார்.
1988 – ஈராக்கில் குருதிய நகரான ஹலப்ஜாவில் நச்சு வாயுத் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
2006 – மனித உரிமைகளுக்கான ஐநா அமைப்பை உருவாக்குவதற்கு ஐநாவின் பொதுச்சபை ஆதரவாக வாக்களித்தது..

பிறப்புகள்
1751 – ஜார்ஜ் மாடிசன், ஐக்கிய அமெரிக்காவின் 4வது குடியரசுத் தலைவர் (இ. 1836)
1789 – கியோர்க் ஓம், ஜெர்மனிய இயற்பியலாளர் (இ. 1854)
1839 – ரெனே சளி-புரூடோம், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1907)
1918 – பிரெடெரிக் ரெயின்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1998)
1929 – இரா. திருமுருகன், தமிழறிஞர்
1953 – ரிச்சர்ட் ஸ்டால்மன், கட்டற்ற மென்பொருள் இயக்கம், க்னூ திட்டம் போன்றவற்றின் தோற்றுவிப்பாளர்..

1954 – அருண் விஜயராணி, ஈழத்து எழுத்தாளர் (இ. 2015)
இறப்புக்கள்
1914 – சார்ல்ஸ் கோபட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1843)
1935 – ஜோன் மாக்லியட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1876)
1940 – செல்மா லாகர்லோஃப், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (பி. 1858)
1945 – எம். ஜே. லெகொக் அடிகளார், அருட்தந்தை (பி. 1880)
1989 – அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய கவிஞர். .

(பி. 1922
1998 – டெரெக் பார்ட்டன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1918).

No comments:

Post a Comment

Adbox