"

Monday, July 1, 2019

வரலாற்றில் இன்று ஜூலை 1 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்

வரலாற்றில் இன்று ஜூலை 1 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.

நிகழ்வுகள்
1798 – நெப்போலியனின் படைகள் எகிப்தை அடைந்தன.
1825 – ஐக்கிய இராச்சிய நாணயங்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள் ஆக்கப்பட்டன.
1851 – ஆஸ்திரேலியாவில் விக்டோரியா குடியேற்றப் பகுதி நியூ சவுத் வேல்சில் இருந்து பிரிக்கப்பட்டது.


1862 – ரஷ்யாவின் அரச நூலகம் அமைக்கப்பட்டது.
1867 – பிரித்தானிய வட அமெரிக்கச் சட்டம், 1867 கனடாவின் அரசமைப்புச் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது; ஜோன் மாக்டொனால்ட் பிரதமராகப் பதவியேற்றார்.
1873 – பிரின்ஸ் எட்வேர்ட் தீவு கனடாக் கூட்டமைப்பில் இணைந்தது.
1876 – சேர்பியா துருக்கி மீது போரை அறிவித்தது.
1881 – உலகின் முதலாவது அனைத்துலக தொலைபேசித் தொடர்பு கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாநிலத்துக்கும் ஐக்கிய அமெரிக்காவின் மேய்ன் மாநிலத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.
1916 – முதலாம் உலகப் போர்: பிரான்சில் சொம் என்ற இடத்தில் இடம்பெற்ற சண்டையின் முதல் நாளில் 20,000 பிரித்தானிய வீரர்கள் கொல்லப்பட்டனர், 40,000 பேர் காயமடைந்தனர்.
1921 – சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1932 – ஏபிசி (அவுஸ்திரேலிய ஒலிபரப்புச் சேவை) ஆரம்பிக்கப்பட்டது.
1933 – சீனர்களின் குடியேற்றத்தை கனடா நாடாளுமன்றம் தடை செய்தது.
1947 – இந்தியாவுக்கு முழு விடுதலையை ஆகஸ்ட் 15 ஆம் நாளன்று வழங்க பிரித்தானிய நாடாளுமன்றம் முடிவெடுத்தது.
1960 – இத்தாலியிடம் இருந்து சோமாலியா விடுதலை அடைந்தது.
1960 – கானா குடியரசானது.
1962 – ருவாண்டா விடுதலை அடைந்தது.
1962 – பெல்ஜியத்திடம் இருந்து புருண்டி விடுதலை அடைந்தது.
1967 – தேய்வழிவுப் போர் தொடங்கப்பட்டது.
1967 – ஐரோப்பிய சமூகம் உருவாக்கப்பட்டது.
1970 – அதிபர் யாஹ்யா கான் மேற்கு பாகிஸ்தானில் மாகாணங்களை அமைத்தார்.
1976 – மடெய்ரா தீவுகளுக்கு போர்த்துக்கல் சுயாட்சியை வழங்கியது.
1978 – அவுஸ்திரேலியாவின் வட மண்டலம் அவுஸ்திரேலிய பொதுநலவாயத்துக்குக் கீழ் சுயாட்சி பெற்றது.
1979 – சோனி நிறுவனத்தின் வோக்மன் அறிமுகம் செய்யப்பட்டது.
1990 – கிழக்கு ஜெர்மனி டொச் மார்க்கை தனது நாணய அலகாக ஏற்றுக் கொண்டது.
1991 – பிராக்கில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் வார்சா ஒப்பந்தம் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டது.
1997 – மக்கள் சீனக் குடியரசு ஹொங்கொங்கில் தனது ஆட்சியை ஆரம்பித்தது. 156 ஆண்டு கால பிரித்தானிய குடியேற்ற ஆட்சி முடிவடைந்தது.
2002 – சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.
2002 – தெற்கு ஜெர்மனியில் இரண்டு விமானங்கள் வானில் மோதியாதில் 71 பேர் கொல்லப்பட்டனர்.
2004 – காசினி-ஹியூஜென்ஸ் விண்கலம் சனிக் கோளின் சுற்று வட்டத்திற்குள் சென்றது.
2006 – கொழும்பில் சுதந்திர ஊடகவியலாளர் சம்பத் லக்மால் சில்வா இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டார்.
பிறப்புகள்
1924 – தி. ச. வரதராசன், ஈழத்து மறுமலர்ச்சி எழுத்தாளர் (இ. 2006)
1927 – சந்திரசேகர், 11வது இந்தியப் பிரதமர்
1929 – ஏ. எம். ராஜா, பின்னணிப் பாடகர் (இ. 1989)
1935 – டி. ஜி. எஸ். தினகரன், இந்தியாவின் முன்னணி கிறிஸ்தவ மறைபரப்புனர்
1961 – கல்பனா சாவ்லா, விண்வெளி வீராங்கனை (இ. 2003)
1961 – டயானா, வேல்ஸ் இளவரசி (இ. 1997)
1961 – கார்ல் லூயிஸ், அமெரிக்க ஓட்ட வீரர்
இறப்புகள்
1965 – வால்ரர் ஹமொண்ட் – ஆங்கில துடுப்பாளர் (பி. 1903)
2001 – நிக்கலாய் பாசொவ், ரஷ்ய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1922)
1971 – வில்லியம் பிராக், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (பி. 1890)

சிறப்பு நாள்
கனடா – கனடா நாள்
கானா – குடியரசு நாள் (1960)
சோமாலியா – விடுதலை நாள் (1960)
ருவாண்டா – விடுதலை நாள் (1962)
புருண்டி – விடுதலை நாள் (1962).

No comments:

Post a Comment

Adbox