"

Saturday, April 6, 2019

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் டானிக் தயாரிப்பது எப்படி?

சிரற்ற காலநிலை காரணமாக அனேகமானோர் அடிக்கடி நோய்வாய்ப்படுவதுண்டு.இதற்கு முக்கிய காரணம் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதே ஆகும்.இந்த பிரச்சினையிலிருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள மருந்தை தினமும் ஒரு ஸ்பூன் குடித்து வந்தாலே போதும்.

 

தேவையானவை, ஆப்பிள் சைடர் வினிகர் - 700மி.லி, பூண்டு  - கால் கப்,  வெங்காயம் - கால் கப், மிளகு - 2,  இஞ்சி துருவியது - கால் கப், குதிரை முள்ளங்கி - 2 டேபிள், மஞ்சள் - 2 டேபிள் ஸ்பூன். முதலில் ஆப்பிள் சைடர் வினிகர் தவிர, மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை வடிகட்டி, ஒரு குடுவையில் எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து மிக நன்றாக குலுக்குங்கள். பின்னர் இந்த கலவையை ஒரு வெளிச்சம் பூகாத இருளான இடத்தில் வைத்துவிடுங்கள். 2-6 வாரங்கள் வரை வைக்கவும். அதன் பின் வடிகட்டி அதனை தேவைப்படும்போது உபயோகப்படுத்தலாம். நோய்வாய்ப்படும்போது இந்த மருந்தை ஒரு ஸ்பூன் குடித்தால் உங்கள் காய்ச்சல் இருமல் சளி போன்ற நோய்கள் குணமாகி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

No comments:

Post a Comment

Adbox