"

Tuesday, January 22, 2019

சீனாவில் தமிழ் மொழி வளர்க்கும் சீனர்கள்...!



சமீபகாலமாக சீனாவை சேர்ந்த பலர் தமிழ் மொழியில் அழகாக பேசுவதும் பாடம் கற்றுக் கொடுப்பதும் போன்ற காட்சிகள் வலைதளங்களில் பரவி வருகிறது. ஏற்கெனவே சீனர்கள் தமிழ் படங்கள் விரும்பி பார்த்து வந்த நிலையில் தமிழை கற்க ஆர்வமாக உள்ளனர்.  

இந்நிலையில்  சீனாவிலுள்ள புகழ்பெற்ற யுனான் மாநிலத்திலுள்ள யுனான் மின்சு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய மொழிகள் மற்றும் கலாச்சாரம் கற்றுகொடுக்கப்படுகின்றன. இந்த பல்கலைக்கழகத்தில் 2017 ஆம் ஆண்டு முதல் தமிழ் துறை அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது. தற்சமயம் இந்த தமிழ்த்துறையில் தமிழ் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் ஒருங்கிணைப்பாளரும் துணைப்பேராசிரியர்  நிறைமதி (சீனப் பெயர் கிகி ஜாங்)


நாங்கள் தமிழ் மொழியில் நான்கு ஆண்டு இளநிலை பட்டம் வழங்கி வருகிறோம். தற்சமயம் இதில் ஆறு மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த படிப்பிற்கு அவர்கள் கட்டாயம் நுழைவுத் தேர்வு எழுதிய தேர்வு செய்யப்படுகின்றன. மேலும் அவர் கூறுகையில் தமிழகத்தில் பல்வேறு சீன நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும் அவர்கள் சீன மொழி மற்றும் ஆங்கில மொழி மட்டுமே தெரிந்துவைத்துள்ளனர். இதனால் அவர்கள் தொழில் ரீதியாக தமிழகத்தில் சில இடர்பாடுகளை சந்திக்க வேண்டி உள்ளது.  அவர்களுக்கு இந்த தமிழ் துறை  எதிர்காலத்தி உதவி புரியும்.  எதிர்காலத்தில் நிறைய மாணவர்கள் தமிழை கற்றுக் கொள்ள வழிவகை செய்யும் என கூறியுள்ளார். இங்கு கல்வி கற்கும் மாணவர்களுக்கு சீன அரசு நிதி உதவிகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிப்பு மட்டுமின்றி தமிழர்களின் கலாச்சாரமான பொங்கல் விழா கொண்டாடுதல், தமிழ் உணவு சாப்பிடுதல், தமிழ் திரைப்படங்களை ரசித்தல் முதலியவற்றின் மூலம் தமிழர் களின் கலாசாரத்தை புரிந்துகொள்வதற்கும், தமிழ் மொழியை மேலும் ஆர்வமாகவும் ஆழமாகவும் கற்றுக்கொள்ளவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தமிழிலேயே பாடம் நடத்துவதை தமிழர்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனத்துடன் தமிழகம் வாணிபம் செய்து வந்த நிலையில் தற்சமயம் அவர்களுக்கு தமிழின் மீது ஏற்பட்டுள்ள ஆர்வத்தின் காரணமாக சீனாவிற்கும் தமிழகத்திற்கும் ஒரு நெருக்கம் ஏற்பட இந்த தமிழ் துறையானது ஒரு உதவி பலமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.


No comments:

Post a Comment

Adbox