COVID-19 வைரஸ் காற்றின் வழியே பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது
உலகம் முழுவதும் இதுவரையில் கொரோனா 1 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், தற்போது கொரோனா வைரஸ் தன்மைகள் குறித்து புதிய புதிய விளக்கங்கள் அளிக்கப்பட்டுவருகின்றன.
கொரோனா வைரஸ் காற்றின் வழியே பரவுவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு செவ்வாய்க்கிழமை அளித்துள்ளது. உலகளாவில் மக்களிடையே கொரோனா தொற்று எவ்வாறு பரவுகிறது என்பது குறித்த பல்வேறு கட்ட ஆய்வுகளை WHO மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பரவும் விதம் குறித்து பாதிக்கப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம்,
COVID-19 வைரஸ் காற்றின் மூலமும் பரவும் வாய்ப்பு இருப்பதாக தொற்றுநோய்க்கான தொழில்நுட்ப வல்லுநர் மரியா வான் கெர்கோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
COVID-19 சுவாச நோயை ஏற்படுத்தும் வைரஸ் முதன்மையாக பாதிக்கப்பட்ட நபரின் மூக்கு மற்றும் வாயிலிருந்து வெளியேற்றப்பட்ட சிறிய நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது என்று WHO முன்பு கூறியது.
ஆனால் ஜெனீவாவை மையமாக கொண்ட மருத்துவ தொற்று நோய்கள் மையத்தில் நடைபெற்ற விஞ்ஞானிகளின் ஆய்வின் முடிவில் மிதக்கும் வைரஸ் துகள்கள் அவற்றை சுவாசிக்கும் நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைக் காட்டுவதற்கான ஆதாரங்களை கோடிட்டுக் காட்டினர்.
வெளியேற்றப்பட்ட அந்த சிறிய துகள்கள் காற்றில் நீடிக்கும் என்பதால், குறிப்பிட்ட குறிப்பிட்ட சூழ்நிலைகளில், கூட்டமாக, மூடிய, மோசமாக காற்றோட்டமான இடங்களில் காற்றின் வழியே பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
நோய்த்தொற்றை கட்டுப்படுத்த சமூக இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் முக கவசம் அணிந்து மூலமாக நோய்த்தொற்றை கட்டுப்படுத்தலாம். நோய் தொற்றியிருந்தது முழுமையாக விடுபட்ட விரிவான ஆய்வுக்கு பின் மட்டுமே இதனை சரிசெய்ய இயலும் என தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment