"

Saturday, April 6, 2019

அதிக வெயிலின் காரணமாக உடலில் ஏற்படும் வெப்பத்தை எளிமையாக சரிசெய்யும் வீட்டு வைத்திய முறைகள்


அதிகரித்து கொண்டு செல்லும் வெப்பநிலை காரணமாக உடல் எப்போழுதுமே உஷ்ணமாக காணப்படும். இதனால் பல தோல் சம்பந்தப்பட்ட நோய்களும் சேர்ந்தே வந்து விடுகின்றது. அந்தவகையில் உடல் உஷ்ணத்திலிருந்து விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளில் ஏதாவது ஒருமுறை பின்பற்றினாலே போதும். 

 * மாதுளை பழசாற்றுடன் கற்கண்டு சேர்த்து பருகி வந்தால் உடல் குளுமையாகும். * நொச்சி இலைகளாய் பனை வெல்லத்துடன் சேர்த்து இரண்டு டம்ளர் நீருடன் நன்றாக காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும். * செவ்வந்திப்பூ கசாயம் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும். * விளக்கெண்ணையுடன் துண்டுதுண்டாக அறுத்த பேயன் வாழைப்பழம் மற்றும் பனகற்கண்டு சேர்த்து, நன்கு ஊறிய பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் குறையும்

.
* கள்ளிமுளையான் தண்டுப்பகுதியை சாப்பிட்டு வந்தால் உடல் நன்கு குளிர்ச்சி அடையும். * சாதம் வடித்த கஞ்சியுடன் உப்பு சேர்த்து குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும். * செம்பருத்தி, சீரகம், நெல்லிவற்றலுடன் நீர் சேர்த்து இரவு முழுதும் ஊற வைத்து, பிறகு அடுத்த நாள் அந்த நீரை குடித்து வந்தால் உடல் குளிர்ச்சி அடையும்.  * வெந்தயத்தை வறுத்து, வறுத்த கோதுமை சேர்த்து பொடி செய்து நீரில் கலந்து குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.

* தக்காளி மற்றும் எலுமிச்சை சாற்றுடன் சர்க்கரை சேர்த்து கலந்து குடித்து வந்தால் உடல் குளிர்ச்சி அடையும். * ஜாதிக்காய் பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.

No comments:

Post a Comment

Adbox