"

Wednesday, March 6, 2019

வரலாற்றில் இன்று மார்ச் 6 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்

வரலாற்றில் இன்று மார்ச் 6 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.



நிகழ்வுகள்
1079 – ஒமார் கயாம் ஈரான் நாட்காட்டியை அமைத்து முடித்தார்.
1447 – ஐந்தாம் நிக்கலாஸ் திருத்தந்தை ஆனார்.
1479 – கனாரி தீவுகளை போர்த்துக்கல் காஸ்டில் பேரரசுக்கு வழங்கியது.
1521 – பேர்டினண்ட் மகலன் குவாம் தீவை அடைந்தார்.

1788 – கைதிகளைக் குடியமர்த்தும் திட்டத்தில் முதற்படியாக முதலாவது தொகுதி கைதிகள் அடங்கிய கப்பல் நோர்போக் தீவை அடைந்தது.
1790 – மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1836 – டெக்சாசில் அலாமோ நகரை மெக்சிக்கோ படைகள் தாக்கிக் கைப்பற்றினர்.
1869 – திமீத்ரி மென்டெலீவ் தனது முதலாவது ஆவர்த்தன அட்டவணையை சமர்ப்பித்தார்.
1940 – குளிர்காலப் போர்: பின்லாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் தற்காலிகப் போர் ஓய்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.
1945 – ருமேனியாவில் கம்யூனிச அரசு பதவிக்கு வந்தது.

1946 – வியட்நாம் போர்: ஹோ சி மின் பிரான்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி பிரான்ஸ் வியட்நாமை பிரெஞ்சு ஒன்றியம் மற்றும் இந்தோசீனக் கூட்டமைப்பினுள் தன்னாட்சி அதிகாரம் கொண்ட பகுதியாக ஏற்றுக் கொண்டது.
1953 – ஸ்டாலினின் மறைவையடுத்து சோவியத்தின் பிரதமராகவும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை செயலாளராகவும் கியோர்கி மாலென்கோவ் பதவியேற்றார்.
1957 – ஐக்கிய இராச்சியக் குடியேற்ற நாடுகளான கோல்ட் கோஸ்ட் மற்றும் பிரித்தானிய டொகோலாந்து ஆகியன இணைந்து கானா குடியரசு என்ற பெயரில் விடுதலை பெற்றன.
1964 – காசியஸ் கிளே தனது பெயரை அதிகார பூர்வமாக முகமது அலி என மாற்றிக் கொண்டார்.
1967 – திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.
1975 – ஈரானும் ஈராக்கும் தமது எல்லை தொடர்பாக உடன்பாட்டிற்கு வந்தன.
1987 – பிரித்தானியாவின் எம்எஸ் ஹெரால்ட் என்ற கப்பல் கவிழ்ந்ததில் 193 பேர் கொல்லப்பட்டனர்.

2007 – இந்தோனீசியாவின் சுமாத்ராவில் இடம்பெற்ற இரண்டு அடுத்தடுத்த நிலநடுக்கங்களில் 70 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்
1475 – மைக்கலாஞ்சலோ, இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியர் (இ. 1564)

1508 – ஹுமாயூன், இரண்டாவது முகலாயப் பேரரசர் (இ. 1556)
1806 – எலிசபெத் பிரௌனிங், ஆங்கிலேயக் கவிஞர் (இ. 1861)
1869 – சேர் ஜேம்ஸ் எமர்சன் டென்னெண்ட், எழுத்தாளர், பயணி, இலங்கைக்கான பிரித்தானிய காலனித்துவ செயலாளர் (பி. 1804)
1927 – கபிரியேல் கார்சியா மார்க்கேஸ், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற கொலம்பிய எழுத்தாளர் (இ. 2014)
1937 – வலன்டீனா டெரெஷ்கோவா, சோவியத் விண்வெளி வீரர், விண்ணுக்குச் சென்ற முதற் பெண்
1948 – ஸ்டீவன் சுவார்ட்சு, அமெரிக்கப் பாடலாசிரியர், இசையமைப்பாளர்
1953 – மாதவ் குமார் நேபாள், நேபாளத்தின் 34வது பிரதமர்
1954 – ம. சா. அறிவுடைநம்பி, தமிழ்ப் பேராசிரியர் (இ. 2014)
1972 – சக்கீல் ஓனீல், அமெரிக்கப் பாடகர்

இறப்புகள்
1866 – வில்லியம் ஹியூவெல், ஆங்கிலேய வரலாற்றாளர், மெய்யியலாளர் (பி. 1794)
1900 – காட்லீப் டைம்லர், செருமானியத் தொழிலதிபர் (பி. 1834)
1939 – லிண்டெமன், செருமானியக் கணிதவியலாளர் (பி. 1852)
1973 – பெர்ல் பக், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. 1892)

1981 – ஜார்ஜ் கிரே, ஆங்கிலேயத் துடுப்பாளர் (பி. 1893)
1982 – அய்ன் ரேண்ட், உருசிய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1905)
1986 – ஜோர்ஜியா ஓ’கீஃப், அமெரிக்க ஓவியர் (பி. 1887)
2000 – எஸ். ஆறுமுகம், ஈழத்துப் பொறியியலாளர், எழுத்தாளர் (பி. 1905)
2006 – கே. ஷங்கர், தமிழ்த் திரைப்பட இயக்குனர் (பி. 1926)
2015 – கிஷோர், தமிழ்த் திரைப்படத் தொகுப்பாளர் (பி. 1978)

சிறப்பு நாள்
கானா – விடுதலை நாள் (1957)

No comments:

Post a Comment

Adbox