கண் பார்வை தெளிவடைய
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிலருக்கு கண் பார்வை தெளிவில்லாமல் மங்கலாக இருக்கும். இதற்கு கண் கண்ணாடிகள் பரிந்துரைக்கப்படுகிறது. நாளுக்கு நாள் அதன் பவர் அதிகரிக்கும். ஆனால் கண்ணாடி அணியாமல் பணச்செலவின்றி பாட்டி வைத்தியம் கை கொடுக்கிறது. இதற்கு நெல்லிக்காய் அருமருந்தாகிறது. நன்றாக பழுத்த நெல்லிக்காயை தண்ணீரில் கழுவி கனத்த ஊசியை கொண்டு அடுத்தடுத்து இரண்டு மூன்று இடங்களில் குத்திவிட்டால் அதிலிருந்து சாறு வெளியேறும். இந்த சாற்றை ஒரு கண்ணுக்கு இரண்டு துளிகள் வீதம் இரு கண்களுக்கும் விட வேண்டும். காலை மாலை இருவேளையாக 21 தினங்கள் தொடர்ந்து விட்டு வந்தால் பார்வை தெளிவடையும். 7 நாளில் மங்கல் விலகும். 21 நாட்களில் பூரண நலம் கிடைக்கும்.
கண் சிவப்பு குணமாக
சிலருக்கு கண் எப்போதும் சிவந்து காணப்படும். கண்ணில் அடிப்பட்டாலும் கண் சிவக்கும். இதற்கு, நெல்லி விதை 16 கிராம், ஆல்பக்கோடா பழம் 32 கிராம், கடுக்காய் 48 கிராம் வீதம் சேகரிக்க வேண்டும். இதில் கடுக்காயை உடைத்து விதையை எடுத்து விட வேண்டும்.ஆல்பகோடா பழத்தின் விதையை எடுத்து உடைத்து அதன் உள்ளே உள்ள பருப்பை மருந்துடன் சேர்த்து எல்லாவற்றையும் அம்மியில் வைத்து தேன்விட்டு மைபோல அரைக்க வேண்டும். இதனை பாட்டிலில் சேகரித்து வைத்து காலை மாலை அரை தேக்கரண்டி குடித்து வந்தால் கண் சிகப்பு மாறும். குணமானதும் நிறுத்தி விடலாம்.
மாலைக்கண் சரியாக
வயோதிகம் காரணமாக சிலருக்கு பொழுது மங்கிய உடன் கண் தெரியாது. இதனை மாலைக்கண் என்பார்கள். இதற்கு நெல்லிக்காய் தூளில் தேக்கரண்டி எடுத்து அதே அளவு தேனும் சேர்த்து இரவு ஆகாரத்திற்கு பின் அரை மணி நேரம் கழித்து சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர பார்வை தெளிவடையும்.
No comments:
Post a Comment