"

Wednesday, March 6, 2019

பித்தவெடிப்பு பாதிப்புகளை நீக்குவதற்கான வழிமுறைகளை இங்கு காண்போம்.

பித்தவெடிப்பு என்பது அனைவருக்குமே ஏற்படும் ஒரு உடல் சார்ந்த பிரச்சனை. வாத, பித்த, கபம் ஆகியவற்றில் பித்தம் அதிகரித்து உடலின் சமநிலை பாதிக்கப்படுவதாலும், சில நுண்ணியக் கிருமிகளாலும் ஏற்படுத்துகிறது. இந்த பாதிப்புகளை நீக்குவதற்கான வழிமுறைகளை இங்கு காண்போம்.

சிறிது வேப்பிலை, சிறிது மருதாணி இலை, மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்கு மைப் போல் அரைத்து பாத வெடிப்புகளில் தடவி வர பித்தவெடிப்பு நீங்கும்.தேனையும், சுண்ணாம்பையும் சம அளவுச் சேர்த்து நன்கு கலக்கிக், குழைத்து பாதங்களில் இரவு உறங்கும் முன்பு தடவ பித்த வெடிப்பு நாளடைவில் குணமாகும். கற்றாழையை பசைப் போல் நன்கு அரைத்துக் கொண்டு, இரவு பாத வெடிப்புகளில் தடவி வேண்டும். இதை தினமும் செய்ய சீக்கிரத்திலேயே பாத வெடிப்புகள் மறையும். 

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகம்.  தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும் பித்த வெடிப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே காலணிகள் வாங்கும்போது, டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.

இரவில் தூங்க செல்லும் முன் கால்களை நன்றாக கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் தேய்த்து வந்தால், பித்த வெடிப்பு வருவதை தடுக்கலாம். வெடிப்பு வராமல் தடுக்க
பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில்  நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு  தொடர்ந்து செய்த வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். மருதாணி இலைகளை நன்றாக அரைத்து  பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்ர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும். 

வீடுகளில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவில் தண்ணீரை பயன்படுத்துவார்கள். வீட்டில் பாத்திரம் கழுவுவது சோப்பு போடுவது வீட்டை  கழுகி சுத்தம் செய்வது தண்ணீர் எடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவதால் அவர்கள் கால்கள் அதிகளவு ஈரமாக இருக்கும். உப்பு தண்ணீர்  அதிகளவில் கால்களில் படுவதால் பாதத்தில் வெடிப்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படும் வெடிப்பு புண்ணாக மாறி வலியை உண்டாக்கும். இதனால் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகின்றனர் பெண்கள். 

இது போன்று பாத வெடிப்புகளால் அவதிப்படும் பெண்கள் அதற்கான சிகிச்சை பெற்றாலும்  குணமாகாது.கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது  நேரம் வைத்திருந்து பின் பாதத்தை சொரசொரப்பான பிரஸ்சை கொண்டு தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து  விடும். இதனால் வெடிப்பு ஏற்படுவது நிற்பதோடு பாதம் மென்மையாகவும் இருக்கும். இதன் மூலம் பாத வெடிப்பு குறையும்.

No comments:

Post a Comment

Adbox