"

Thursday, March 7, 2019

வரலாற்றில் இன்று மார்ச் 7 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்


வரலாற்றில் இன்று மார்ச் 7 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.

நிகழ்வுகள்
1793 – ஸ்பெயின் மீது பிரான்ஸ் போரை அறிவித்தது.
1798 – பிரெஞ்சு இராணுவம் ரோமினுள் நுழைந்தது. ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது.
1799 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் பாலஸ்தீனத்தின் ஜாஃபா நகரைக் கைப்பற்றினான். அவனது படைகள் கிட்டத்தட்ட 2,000 அல்பேனியர்களைக் கொன்றனர்.

1814 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் குரோன் நகரில் உருசியர்களுக்கும் புருசியர்களுக்கும் எதிரான போரில் வெற்றி பெற்றான்.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வடமேற்கு ஆர்கன்சாவில் அமெரிக்கப் படைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படையினரை வென்றனர்.
1876 – அலெக்சாண்டர் கிரகம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்றார்.
1902 – இரண்டாம் போவர் போர்: தென்னாபிரிக்காவின் போவர்கள் பிரித்தானியர்களுக்கு எதிரான கடைசிச் சமரில் வெற்றியீட்டினர்.
1911 – மெக்சிக்கோவில் புரட்சி வெடித்தது.
1912 – தென் முனையைத் தாம் டிசம்பர் 14, 1911 இல் அடைந்ததாக ருவால் அமுன்சென் அறிவித்தார்.
1918 – முதலாம் உலகப் போர்: பின்லாந்து ஜெர்மனியுடன் கூட்டுச் சேர்ந்தது.
1936 – லொக்கார்னோ உடன்படிக்கைகள், வெர்சாய் ஒப்பந்தம் ஆகியவற்றிற்கு எதிராக ரைன்லாந்தை ஜெர்மனி கைப்பற்றியது.
1951 – கொரியப் போர்: கொரியாவில் ஐநாப் படைகள் சீனப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர்.
1969 – கோல்டா மெயிர் இசுரேலின் முதற் பெண் பிரதமரானார்.

1989 – மக்கள் சீனக் குடியரசு திபெத்தின் லாசா பகுதியில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தனர்.
1996 – பாலஸ்தீனத்தில் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.
2006 – காசியில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
2007 – இந்தோனீசியாவின் யாஹ்யகர்த்தா விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த கருடா விமானம் வயல் ஒன்றில் வீழ்ந்து வெடித்ததில் 49 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்
1765 – யோசெப் நிசிபோர் நியெப்சு, ஒளிப்படவியலைக் கண்டுபிடித்தவர் (இ. 1833)
1934 – நாரி கான்ட்ராக்டர், இந்தியத் துடுப்பாட்ட வீரர்
1952 – விவியன் ரிச்சர்ட்ஸ், மேற்கிந்தியத் துடுப்பாளர்
1968 – ராஜூ சுந்தரம், இந்திய நடன இயக்குனர்

1970 – ரேச்சல் வய்ஸ், ஆங்கிலேய நடிகை

இறப்புக்கள்
1274 – புனித தாமசு அக்குவைனாசு, இத்தாலிய மதகுரு, மெய்யியலாளர் (பி. 1225)
1892 – சேர் வில்லியம் எச். கிரெகரி, இலங்கையின் முன்னாள் ஆளுநர்


1944 – கல்லடி வேலுப்பிள்ளை, ஆசுகவி, ஈழத்து எழுத்தாளர் (பி. 1860)

1961 – கோவிந்த் வல்லப் பந்த், இந்திய அரசியல்வாதி, உத்தரப் பிரதேசத்தின் 2வது முதலமைச்சர் (பி. 1887)
1990 – சுத்தானந்த பாரதியார், கவியோகி (பி. 1897)
1999 – இஸ்டான்லி குப்ரிக்கு, அமெரிக்கத் திரைப்பட இயக்குனர் (பி. 1928)
2014 – பாலாஜி, திரைப்பட, சின்னத்திரை நகைச்சுவை நடிகர்

சிறப்பு நாள்
அல்பேனியா – ஆசிரியர் நாள்

No comments:

Post a Comment

Adbox