"

Tuesday, January 29, 2019

வரலாற்றில் இன்று ஜனவரி 29 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்

வரலாற்றில் இன்று ஜனவரி 29 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.


நிகழ்வுகள்
1595 – ஷேக்ஸ்பியரின் ரோமியோவும் ஜூலியட்டும் நாடகம் முதன் முதலாக அரங்கேறியது.
1676 – மூன்றாம் பியோதர் ரஷ்யாவின் மன்னனாக முடி சூடினான்.
1814 – நெப்போலியன் பொனபார்ட்டின் பிரெஞ்சு இராணுவம் பிரியென் நகரில் இடம்பெற்ற சமரில் ரஷ்யாவை வெற்றி பெற்றது.
1819 – ஸ்டாம்ஃபோர்ட் ராபில்ஸ் சிங்கப்பூரில் தரையிறங்கினார்.
1861 – கான்சஸ் ஐக்கிய அமெரிக்காவின் 34வது மாநிலமாக இணைந்தது.
1863 – ஐக்கிய அமெரிக்காவின் இடாகோ மாநிலத்தில் பெயார் ஆற்றருகில் இராணுவத்தினருக்கும் ஷோஷோன் பழங்குடிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமரில் பல நூற்றுக்கணக்கான பழங்குடிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
1886 – ஜெர்மனியரான கார்ல் பென்ஸ் பெட்ரோலினால் இயங்கும் முதலாவது தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார்.
1916 – முதலாம் உலகப் போர்: பாரிஸ் ஜெர்மனியரின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானது.
1929 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட லியோன் ட்ரொட்ஸ்கி துருக்கியை அடைந்தார்.
1940 – ஜப்பான், ஒசாக்காவில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தொடருந்து ஒன்று வெடித்ததில் 181 பேர் கொல்லப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் கொனியூச்சி என்ற இடத்தில் சோவியத் துணை இராணுவத்தினரினால் பெண்கள், குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 38 பேர் கொல்லப்பட்டனர்.
1946 – ஐக்கிய அமெரிக்காவில் CIG எனப்படும் மத்திய உளவுத்துறை குரூப் (Central Intelligence Group) அமைக்கப்பட்டது.
1996 – இத்தாலியில் வெனிஸ் நகரில் உள்ள ஓப்பரா மாளிகையான லா ஃபெனீஸ் தீயினால் அழிந்தது.
2005 – சீனாவின் பெருநிலப்பரப்பில் இருந்து 1949ம் ஆண்டிற்குப் பின்னர் முதற்தடவையாக வர்த்தக விமானம் ஒன்று தாய்வானுக்கு வந்து சேர்ந்தது.


பிறப்புகள்
1860 – ஆன்டன் சேகொவ், ரசிய எழுத்தாளர் (இ. 1904)
1866 – ரொமெயின் ரோலண்ட், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1944)
1926 – அப்துஸ் சலாம், நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானிய இயற்பியலாளர் (இ. 1996)
1970 – ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், இந்திய ஒலிம்பிக் வீரர்.


இறப்புகள்
1934 – பிரிட்ஸ் ஹேபர், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனிய வேதியியலாளர் (பி. 1868)
1963 – றொபேட் புறொஸ்ட், அமெரிக்கக் கவிஞர் (பி. 1874)
1980 – எஸ். வி. சுப்பையா தமிழ்த்திரைப்பட, நாடக நடிகர்
1981 – பாலகிருஷ்ணன், நாதசுரக் கலைஞர் (பி. 1945)
1998 – பி. எஸ். பி. பொன்னுசாமி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1908)


சிறப்பு நாள்
கிப்ரல்டார் – அரசியலமைப்பு நாள்

No comments:

Post a Comment

Adbox