"

Monday, January 28, 2019

போராட்டத்தில் பங்கு பெற்றுள்ள ஆசிரியர்கள் பணியில் சேர்வதற்கு இறுதி வாய்பு பள்ளிக்கல்வித்துறை


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒருவாரமாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆசிரியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்ற காரணத்தினால் பள்ளியில் கற்றல் கற்பித்தல் பணி முழுமையாக தடைபட்டுள்ளது.

இந்நிலையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்ப வேண்டும் மாணவர்கள் பொதுத் தேர்வை கருத்தில் கொள்ள வேண்டும் என அரசும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளன. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை கடந்த 3 நாட்களாக சுற்று அறிக்கையினை வெளியிட்டு இருந்தது.

இன்று மீண்டும் கடைசி வாய்ப்பாக நாளை காலை 9 மணிக்கு  பணிக்கு திரும்பவேண்டும். பள்ளிக்கு திரும்பும் ஆசிரியருக்கு அவர்கள் கேட்கும் பள்ளியில் அவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும். அவ்வாறு திரும்பாத பட்சத்தில் அவர்களின் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் அவர்களுடைய படமானது காலிப்பணியிடங்கள் காண்பிக்கப்பட்டு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என கூறியுள்ளது. 

No comments:

Post a Comment

Adbox