"

Tuesday, January 29, 2019

ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டதா...? போராட்டத்தின் இன்றைய நிலை...



கடந்த ஒரு வார காலமாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்கள் இன்று அரசின் கடுமையான உத்தரவால் பணிக்கு திரும்பினர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை மீண்டும் இறுதி வாய்ப்பினை பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளது. இன்று மாலைக்குள் பள்ளிக்கு வந்து பணியேற்கும் ஆசிரியர்களுக்கு எந்தவிதமான துறை நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. அவ்வாறு பணி கற்காமல் காலம் தாழ்த்தி வரும் ஆசிரியர்களின் மீது 17 b துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப்படுவார்கள் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 97 சதவீத ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பியுள்ளனர்.  சென்னை மாவட்டத்தில் உள்ள 30 அரசுப் பள்ளிகளில் 4 பேர்மட்டுமே பணியில் சேரவில்லை.  போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்த ஆசிரியர்களில் மொத்தம் 1,257 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் ஜாக்டோ ஜியோ வழக்கு நடைபெற்றது. அதில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முதல்வர் அழைத்து பேசினால் மட்டுமே தங்களது போராட்டம் கைவிடப்படும் என்று தெரிவித்துள்ளனர். அரசு நீதிமன்றத்தில் 90% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளதாக கூறி உள்ளது. இதையடுத்து நீதிபதி அவர்கள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிப்பதாகவும்,  பிரச்சனைக்கு தீர்வு காண்பதே நீதிமன்றத்தின் குறிக்கோள் என நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார்.

இந்நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்டு பணிக்குத் திரும்பிய ஆசிரியர் ஒருவர் கூறுகையில், மாணவரின் நலன் கருதியே தாங்கள் என்று பள்ளிக்கு திரும்பியதாகவும். வருகின்ற மாதம் முதல் வாரத்தில் 12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. இதன் காரணத்தினால் பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதாகவும், எங்களுக்கு மாணவர்களின் நலனில் அக்கறை உள்ளது. நாங்கள் எங்களது கோரிக்கைகளை பொருட்படுத்தாமல் பணிக்கு திரும்பியதாக  கூறினார்.

இன்னிலையில் பொதுமக்களும் மாணவர்களின் பெற்றோர்களும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், செய்முறை தேர்வு நெருங்கும் சமயத்தில் அவர்கள் பள்ளிக்கு மீண்டும் வந்திருப்பது தங்கள் பிள்ளைகளின் மீது அவர்கள் கொண்டுள்ள அக்கறையை காட்டுகிறது. அவர்களது நியாயமான கோரிக்கைகளை அரசு நிச்சயமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென கூறினர்.

No comments:

Post a Comment

Adbox