"

Friday, August 3, 2018

முதல் முறையாக வேற்றுகிரக வாசிகளிடம் இருந்து பெறப்பட்டுள்ள ரேடியோ சிக்னல்


முதல் முறையாக வேற்றுகிரக வாசிகளிடம் இருந்து பெறப்பட்டுள்ள ரேடியோ சிக்னல்
பூமிக்கு, விண்வெளியில் இருந்து முதல்முறையாக ரேடியோ சிக்னல்கள் கிடைத்துள்ளது.கனடா நாட்டின் பிரிட்டிஸ் கொலம்பியா மலைத் தொடரில் உள்ள ஓகனான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு 16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பணம் செலவு செய்யிது அமைக்கப்பட்ட சிமி என்ற தொலை உணர்வு கருவியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ரேடியோ அலைவரிசை சிக்னல் ஒன்று பதிவானது. அந்த ரேடியோ அலைவரிசை சிக்னல் மிக குறுகிய காலா அளவை கொண்டுள்ளது. அது 700 மெகா ஹெர்ட்ஸ் என்ற மிக மெல்லிய அலைவரிசைக்கும் கீழாக இருந்தது.


இதையடுத்து இந்த பதிவை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் குழு, ரேடியோ சிக்னல் பூமிக்கு வெளியே, விண்வெளியில் உள்ள ஏதோ ஒரு கிரகத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட கருவியில் இருந்து வந்துள்ளதை உறுதிப்படுத்தி உள்ளனர்.


இதற்கு முன்பு 2007-ஆம் ஆண்டு இதே போல் பதிவான ஒரு ரேடியோ சிக்னலோடு, தற்போது பதிவான சிக்னலை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் குழு , தற்போது பதிவான சிக்னல் மூலம் அண்டவெளியில் எங்கோ ஓரிடத்தில் அறிவியலில் முன்னேறி உள்ள உயிரினம் இருப்பது என்பது உறுதி எனக் கூறியுள்ளனர். ஆகவே பூமியைப்போலவே வேறு ஏதோ ஒரு கிரகத்தில் உயிரினம் வாழ்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Adbox