"

Wednesday, May 15, 2019

தீராத வேதனையும் வலியையும் தரும் மூல நோயினை நம் சமையல் அறையில் உள்ள பொருள்களைக் கொண்டு எளிதில் கட்டுப்படுத்தும் வழிமுறை.

தீராத வேதனையும் வலியையும் தரும் மூல நோயினை நம் சமையல் கூடத்தில் உள்ள பொருள்களைக் கொண்டு எளிதில் கட்டுப்படுத்த


பைல்ஸ் எனப்படும்  மூல நோய் என்பது ஆசனவாய் உள்ளே அல்லது வெளியே நரம்புகள் வீக்கம் அடைவது தான் மூலநோய். இதனை மருத்துவ மொழியில் ஹேமிராய்டு என கூறப்படும். 

மலம் போகும்போது கடினமாக உணர்வது, எரிச்சல், வலி போன்றவை இதன் அறிகுறிகள். மலம் கழிக்கும் போது, அந்த இடத்தில் அழுத்தம் அதிகரிப்பதால் மூல நோய் அதிகரிக்கிறது. சில நேரங்களில்  இரத்தப்போக்கும் உண்டாகலாம்.




இதனை குணப்படுத்த எளிய வழிமுறைகள் 

தினமும் இரண்டு முறை முள்ளங்கி சாறு பருகுவது  மூல நோயினை குணமாகும்.  முள்ளங்கி சாறு 1/4 கப்பில் தொடங்கி மெதுவாக 1/2 கப் வரை பருகலாம். 

நான்கு அத்திப் பழத்தை இரவில் சிறிதளவு நீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் இந்த நீருடன் சேர்த்து ஊற வைத்த அத்திப்பழத்தையும் இரண்டு முறை உட்கொள்ளுங்கள்.

மாதுளம் பழத்தின் தோலை எடுத்து, நீரில் கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள் .  இரண்டு முறை இந்த நீரை குடித்து வருவதால் நல்ல பலன் கிடைக்கும். அதோடு மட்டுமல்லாது வயிறு தொடர்பான அத்தனை பிரச்னைகளையும் சரிசெய்யும் மேலும் மலச்சிக்கலைப் போக்கும். மாதவிலக்கின் போது உண்டாகும் வலியையும் தீர்க்கும்.

மூல நோயால் ஏற்படும் இரத்தப் போக்கை குறைக்க, அரை கப் ஆட்டுப் பாலுடன், ஒரு ஸ்பூன் தூள் செய்த கடுகை சேர்த்து, அதனுடன் சர்க்கரை சேர்த்து பருகவும். காலையில் வெறும் வயிற்றில் இதனைப பருகுவதால் மூலநோய் குணமாகும்.

காய்ந்த மாங்காய் கொட்டைகளை எடுத்து தூளாக்கிக்,  இந்த பவுடர் இரண்டு ஸ்பூன் எடுத்து சிறிதளவு தேனில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட்டு வரவும்.

அதேபோல் ஒரு ஸ்பூன் இஞ்சி, மற்றும் எலுமிச்சை சாற்றுடன், சிறிதளவு புதினா இல்லை மற்றும் தேன் சேர்த்து பருகவும். இதனை ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை பருகலாம்.



நவாப்பழம் அல்லது நாவல் பழம் , மூல நோய்க்கு சிறந்த ஒரு தீர்வாகும். இந்த பழம் பொதுவாக கோடை காலத்தில் அதிகமாகக் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி மூல நோயைப் போக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் ஒரு கையளவு நாவல் பழத்தில் சிறிதளவு உப்பு சேர்த்து உட்கொள்ளலாம்.

கருப்பு எள்ளை எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். இரண்டு பங்கு நீர் ஆவியாகும் வரை கொதிக்க வைத்து பேஸ்ட் போல் செய்துக் கொள்ளவும். இந்த விழுதுடன், வெண்ணெய் சேர்த்து தினமும் ஒருமுறை சாப்பிடவும்.
மேல் குறிப்பிட்ட முறைகளில் எதாவது ஒன்றை பயன்படுத்தி வந்தால் மூலநோய் எளிதில் கட்டுப்படும்.

No comments:

Post a Comment

Adbox