"

Tuesday, April 30, 2019

தண்ணீர் முதல் மாமிசம் வரை எந்த உணவு ஜீரணிக்க எவ்வளவு நேரமாகும்? தெரிஞ்சிக்கிட்டு சாப்பிடுங்க... உடலில் எந்த பிரச்சனையும் வராது...!



நம்முடைய உடலியல் கோளாறுகள் அனைத்திற்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது மலச்சிக்கல் தான். அந்த மலச்சிக்கல் உண்டாவதறகுக் காரணமே நாம் உண்ணும் உணவுகளும் அதன் ஜீரணத்தன்மையும் தான். நாம் உண்ணுகின்ற உணவு சரியாக ஜீரணமாவதைப் பொறுத்து தான் மலச்சிக்கலை நீக்கி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.



அதனால் எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரங்களில் ஜீரணமாகும் என்பதைத் தெரிந்து கொண்டு சாப்பிட ஆரம்பியுங்கள். அப்படி நாம் அன்றாடம் வழக்கமாகச் சாப்பிடும் எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரங்களில் ஜீரணமாகும் என்பது பற்றிய நீண்ட பட்டியலை இங்கு பார்க்கலாம்.



தண்ணீர், ஜூஸ்


நாம் குடிக்கும் தண்ணீர் மற்றும் பழச்சாறுகள் அனைத்தும் நாம் குடித்த 20 முதல் 30 நிமிடங்களுக்குள்ளாகவே ஜீரணமாகிவிடும். தண்ணீர் கூட ஜீரமடையுமா என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயமாக. நாம் குடிக்கும் தண்ணீர் கிட்டதட்ட 30 நிமிடஙகள் வரை எடுத்துக் கொள்கின்றன.

பால்



பால் பொதுவாகவே ஜீரணமடையக் கொஞ்சம் நுரம் அதிகமாகும் தான். அதாவது நாம் குடிக்கும் ஒரு கிளாஸ் பால் ஜீரணமாவதற்கு கிட்டதட்ட 4 முதல் 5 மணி நேரமாவது ஆகுமாம்.

பழங்கள்

அப்பாடா இதுதான்ப்பா நாம சாப்பிட்ட முடிக்குறதுக்குள் ஜீரணமாகிடுது. ஆமாங்க. நாம் சாப்பிடும் வாழைப்பழம், ஆப்பிள் போன்ற பழங்கள் தான் சாப்பிட்ட 20 முதல் 30 நிமிடங்களுக்குள்ளாகவே ஜீரணமாகிவிடுகிறதாம்.

ஆரஞ்சு, சிட்ரஸ் பழங்கள்

பொதுவாக ஆரஞ்சு மற்றும் மற்ற சிட்ரஸ் பழங்கள் வெகு விரைவில் ஜீரணமாகிவிடும். அதிகபட்சமாக அரை மணி நேரத்திற்குள்ளாகவே ஆரஞ்சு மற்றும் மற்ற சிட்ரஸ் பழங்கள் ஜீரணமடைந்துவிடும்.



பீச், செர்ரி பழம்

பீச், செர்ரி போன்ற பழங்கள் நாம் சாப்பிட்ட 40 நிமிடங்களுக்கு உள்ளாகவே ஜீரணமாகிவிடும்.

திராட்சை

திராட்சை பழம் நாம் சாப்பிட்ட 30 நிமிடங்களுக்குள் ஜீரணமாகிவிடும்.

முலாம்பழம்

முலாம்பழம் ஜீரணமடைய 30 நிமிடங்கள் மட்டுமே எடுக்குமாம். வெயில் காலத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த பழம் என்றே இதை சொல்லலாம். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். உடல் சூடு குறைவதோடு எளிதிலும் ஜீரணமாகும். உடலும் ஆரோக்கியம் பெறும்.


கோதுமை போன்ற தானியங்கள்


கோதுமை, அரிசி போன்ற கடினமான தானியங்கள் ஏன் மருத்துவர்கள் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள் தெரியுமா? அது காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை ஒப்பிடுகையில் ஜீரணமடைவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்கின்றன.

உதாரணமாக அரிசி, கோதுமையுடன் சேர்த்து சாப்பிடுகிற மற்ற காய்கறிகள் வேகமாக ஜீரணமடைந்த பின், அரிசியோ கோதுமையோ சாப்பிட்டு 3 மணி நேரம் வரை ஆகிறது ஜீரணமடைய. அந்த உணவுகளின் ஜீரணத்துக்காக உடலில் அதிக நேரம் தேவையில்லாமல் ஆற்றலும் வீணாகிறது.

தானியங்கள்

சிறு தானியங்களில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதனால் அது ஜீரணிக்க கொஞ்சம் நேரம் அதிகம் தான் எடுக்கும். சிறு தானியங்கள் ஜீரணமாவதற்குக் கிட்டதட்ட 90 நிமிடங்கள் (ஒன்றரை மணி நேரம்) எடுத்துக் கொள்கிறது.

சோளம்

ஸ்வீட் கார்ன் என்று சொல்லப்படுகிற மக்காச்சோளம் சாப்பிட்ட 45 நிமிடங்களுக்குள் ஜீரணமாகிவிடும். மாலை நேரத்திற்கு ஏற்ற சிறந்த ஸ்நாக்காக ஸ்வீட் கார்ன் இருக்கும்.

வேகவைத்த காய்கறிகள்

வேகவைத்த காய்கறிகள் சாப்பிட்ட 40 நிமிடங்களுக்குள் ஜீரணமாகிவிடுகின்றன. வேகவைத்த காய்கறிகள் ஜீரணிப்பதற்கும் பச்சை காய்கறிகள் ஜீரணமாவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

பீட்ரூட்

பொதுவாக காய்கறிகள் வேகமாக ஜீரணமடைந்து விடும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? நாம் சாலட் போன்றவற்றில் சேர்த்துக் கொள்கிறோமே பீட்ரூட் அது மட்டும் ஜீரணமடைவதற்கு 50 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறதாம்.

காலிஃபிளவர்

காலிஃபிளவர் நாம் சாப்பிட்டு 45 நிமிடங்களுக்குள்ளாக ஜீரணமடைந்து விடுகிறது. இதில் அதிக அளவு கோலின் சத்து இருக்கிறது என்பதும் நமக்கு நன்கு தெரிந்தது தான்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு மென்மையான இருப்பதால் வேகமாக ஜீரணமடைந்து விடும். எளிய உணவாக இருக்கிறது என்று குழந்தைகளுக்கும் நிறைய கொடுக்கிறோம். ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? சிக்கன் ஜீரணமடைவதற்கு எடுத்துக் கொள்ளும் அதே நேரம் தான் உருளைக்கிழங்கு ஜீரணமடையவும் எடுத்துக் கொள்கிறது.

பச்சைப் பட்டாணி
பச்சை பட்டாணியில் நார்ச்சத்து அதிகம் இருப்பது தெரிந்த விஷயம் தான். இந்த பட்டாணி நாம் சாப்பிட்ட 90 முதல் 120 நிமிடங்களுக்குள் ஜீரணமாகிவிடும்.

கேரட்

கேரட் சமைத்து சாப்பிடுவது கூட நிறைய பேருக்குப் பிடிக்காது. ஆனால் பச்சையாகவோ அல்லது ஜூஸாகவோ விரும்பிச் சாப்பிடுவோம். ஆனால் பச்சையாகச் சாப்பிடும் கேரட் கிட்டதட்ட 50 நிமிடங்கள் ஆகுமாம் ஜீரணமாக.

ப்ரக்கோலி

நியூட்ரிஷியன்கள் பொதுவாக நீரிழிவு நோயாளிகள், இதயக் கோளாறு உள்ளவர்கள், உடல் பருமானவர்கள், புற்றுநோயை விரட்ட எண்ணுபவர்கள் என எல்லோருக்குமான டயட்டில் ஃபிரக்கோலியை முதன்மையாகப் பரிந்துரை செய்கிறார்கள். அப்படிப்பட்ட பிரக்கோலி எளிதில் ஜீரணமடையக் கூடியதாகவும் இருக்கிறது. சாப்பிட்டு 40 நிமிடங்களுக்குள் ஜீரணமடைந்துவிடுகிறது.

கொண்டைக்கடலை

புரதமும் நார்ச்சத்தும் நிறைந்த உணவு தான் இந்த கொண்டைக்கடலை. இதுவும் கிட்டதட்ட சிக்கனைப் போன்று தான் 90 முதல் 120 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்கிறது.

மிளகாய்

நாம் உணவில் சேர்க்கும் மிளகாயும் கிட்டதட்ட அரை மணி நேரம் முதல் 40 நிமிடங்களுக்குள் மிளகாய் ஜீரணமாகிவிடுகிறது.

கொட்டைகள்

முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற கொட்டை வகைகள் ஜீரணமடைய மிக மிக அதிக நேரங்கள் எடுத்துக் கொள்கின்றன. கிட்டதட்ட மூன்று மணி நேரம் ஆகும் அவை ஜீரணமாக.

வேகவைத்த முட்டை

பொதுவாக காலை நேர உணவில் முட்டை பரிந்துரைக்கப்படுவது ஏன் தெரியுமா? அது ஜீரணமடைய 2 மணி நேரம் ஆகும். மதிய இடைவேளை உணவு எடுத்துக் கொள்ளும் வரை உங்களுக்கு பசி தாங்கிக் கொள்ள முடியும்.

சிக்கன்

பொதுவாக அசைவப் பிரியர்களில் அதிகம் பேர் விரும்பிச் சாப்பிடுவது சிக்கனை தான்.

ஆனால் அந்த சிக்கன் இரவு நேரங்களில் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள். ஏனென்றால் அது ஜீரணமடைவதற்கான ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் வரை எடுத்துக் கொள்கிறது.

மீன்

அசைவ உணவுகளிலேயே மிக வேகமாகவும் எளிதாகவும் ஜீரணமடையக்கூடிய உணவு என்றால் அது மீன் தான். மீன் நாம் சாப்பிட்டு 45 முதல் 60 நிமிடங்கள் (அதாவது சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாக) ஜீரமடைய எடுத்துக் கொள்ளுமாம்.

சிவப்பிறைச்சி

மட்டன், மாட்டிறைச்சி போன்ற சிவப்பு இறைச்சி வகைகள் தான் அதிக நேரம் ஆகின்றன ஜீரணமாக. அதனால் தான் அவற்றை இரவு உணவில், பயணங்களின் போது சேர்க்க வேண்டாம் என நிறைய மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். இவை ஜீரணிக்க கிட்டதட்ட 3 மணி நேரங்களுக்கும் மேலாக எடுத்துக் கொள்கின்றன.



No comments:

Post a Comment

Adbox