கிரெடிட் கார்டு என்பது நிதி நிறுவனங்கள் கொடுக்கும் ஒருவகைக் கட்டண அட்டை.
இத்தகைய கிரெடிட் கார்டுகள் பயன்படுத்துவதில் உள்ள நன்மைகள் என்னென்ன..?
கிரெடிட் கார்டு என்றால் என்ன?
கடன் பெறுபவர் மற்றும் கடன் கொடுப்பவரின் உறுதி மொழிகளின் அடிப்படையாகக் கொண்டு பொருட்களை விற்பவர்களுக்குச் செலுத்தப்படும் கடன் பத்திரம். பொருட்களை வாங்கவும், சேவைகளுக்குக் கட்டணம் செலுத்துவதற்கும் உபயோகப்படும் ஒரு வகையான கட்டண கிரெடிட் கார்டு.
கிரெடிட் கார்டுகள் பணம் செலுத்தும் சேவையும் கடன் பெறும் சேவையும் சேர்த்து அளிக்கிறது. தேவைக்கு ஏற்ப எப்பொழுது வேண்டுமானாலும் கடன் பெற்றுக்கொள்ள முடியும், அதேசமயம் எதிர்காலத்தில் வட்டியும் சேர்த்துச் செலுத்தவேண்டும்.
சலுகை புள்ளிகள்:
கிரெடிட் கார்டில் பயன்பாட்டில் மற்றும் அதன் சலுகைகள் மூலம் சலுகை புள்ளிகள் வழங்கப் படுகின்றது. செலவு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் சில புள்ளிகள் வழங்கப்படுகின்றது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அளிக்கும் சலுகைகளை வைத்துக்கொண்டு சில பொருட்களைக் குறைந்த விலைக்கு வாங்க முடியும்.
இந்தப் புள்ளிகளை அதிகமாகச் சேமிக்கும் பொழுது அதற்கேற்ப பரிசுகளும் வெல்லமுடியும். இது கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
மீளப்பெறும் கிரெடிட் கார்டுகள் உள்ளதா?
கேஷ்பே கிரெடிட் கார்டுகள் அமெரிக்காவில் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்தக் கிரெடிட் கார்டுயை கொண்டிருப்பவர்கள் சில சமயம் பணத்தைத் திரும்பப் பெற முடியும். எடுத்துக்காட்டாக , சில உணவகங்களில் 10% தள்ளுபடி பெற இயலும். இது பணமாகத் திரும்பக் கிடைக்கும்.
வியாபாரம்
பெட்ரோலிய நிறுவனங்கள், சினிமா நிறுவனங்கள், மற்றும் பல இணையதள விற்பனையாளர்கள் தங்கள் பொருட்களைச் சந்தைப்படுத்த சில சலுகைகளை இந்தக் கிரெடிட் கார்டு மூலம் விளம்பரப் படுத்துகின்றனர்.
எடுத்துக்காட்டாக, Amazon நிறுவனம் கிரேட் இந்தியன் செல் 2018 ஐ பயன்படுத்தி, அவர்களது ஆப்பிள் வாங்கும் பொருட்களுக்குச் சலுகை அறிவிக்கின்றனர். HDFC நிதி நிறுவனம் வழங்கும் கிரெடிட் கார்டுகளுக்கு இது பொருந்தும்.
காப்பீடு உண்டா?
கிரெடிட் கார்டு கொண்டுள்ளவர்களுக்கு நிதி நிறுவனங்கள் சிறந்த காப்பீடு தருகின்றன. எடுத்துக்காட்டாக, கிரெடிட் கார்டு கொண்டவர் தனது அட்டையைத் தொலைத்து விட்டார் என வைத்துக்கொள்வோம். அதை மற்றொருவர் எடுத்து தவறாகப் பயன்படுத்தும் பட்சத்தில் பயனாளி அதற்கு முழுப் பொறுப்பேற்க தேவையில்லை. அதே சமயம் பயனாளி க்கு முழுத் தொகையும் திரும்பிச் செலுத்தப்படும்.
வட்டியில்லாக் கடன் எப்படி?
சில கிரெடிட் கார்டுகள் வட்டியில்லாக் கடன் கொடுக்கின்றன. அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை முன்னரே செலுத்தியிருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அதற்கு 18% வட்டி செலுத்தவேண்டும்.
கிரெடிட் கார்டு கொண்டு கடன் பெறும் பட்சத்தில், முதல் 59 நாட்களுக்கு வட்டி செலுத்த தேவையில்லை. அதன் பிறகே வட்டி செலுத்த நேரிடும். ஆகையால் தவணை நாளுக்கு முன்பாகவே கடனை திருப்பிச் செலுத்துவது சால சிறந்தது.
செலவழிக்கும் போது வரவு வைக்க முடியு மா?
சில நிதி நிறுவனங்கள் சலுகை புள்ளிகள், பண மீட்சி, மற்றும் பல சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர். கடன்கள் திரும்பச் செலுத்தாத பட்சத்தில் அபரிமிதமான வட்டியை வசூல் செய்கின்றனர்.
கிரெடிட் கார்டுயை நண்பனாக ஏற்கலாமா?
கிரெடிட் கார்டுகளை மிகச் சிறப்பாக உபயோகிக்கும் பட்சத்தில் இது நமக்குச் சிறப்பான நண்பனாக இருக்கின்றது. அதே சமயம் தவறும் பட்சத்தில் நமது கழுத்தை நெரிகின்றது. தேவை இல்லாத செலவினங்களைக் குறைக்கும் பட்சத்தில் கிரெடிட் கார்டுகள் உபயோகிப்பது நமக்கு லாபமே.
No comments:
Post a Comment