நேபாள எல்லையில் உள்ள இமயமலை அடிவார பகுதியில் ராட்சத பனி மனிதனின் மிகப்பெரும் கால்தடத்தை கண்டதாக இந்திய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர் .
நேபாளம் இமயமலையின் பனிமலைப் பகுதியான மகாலு-பருண் எல்லை பகுதியில் இந்திய ராணுவத்தினர் மலையேற்றம் மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது 32 அங்குலம் நீளமும், 15 அங்குலம் அகலமும் உடைய மாபெரும் காலடி தடம் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.
நேபாள பகுதியில் உள்ள மகாலு-பருண் பகுதியில் ஏற்கனவே ஒருமுறை எட்டி எனப்படும் பனி மனிதனை ராணுவத்தினர் நேரில் கண்டுள்ளதாக தகவல் வெளிவந்தது. மேலும் அந்த உருவம் மனிதனை விட உயரமாவும்,தலை முழுவதும் நீண்ட சுருண்ட முடிகளுடனும், மடிந்த காதுகளுடனும், உடலில் செம்பழுப்பு நிறத்திலான முடியும் இருந்ததாகவும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் எட்டி எனப்படும் பனி மனிதனுடைய காலடித்தடத்தனை கண்டதாகவும், அதனை புகைப்படம் எடுத்தும் தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இது மக்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment