"

Tuesday, April 30, 2019

வரலாற்றில் இன்று ஏப்ரல் 30 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்

வரலாற்றில் இன்று ஏப்ரல் 30 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.




நிகழ்வுகள்
313 – ரோமப் பேரரசின் மன்னன் லிசீனியஸ் அனைத்து கிழக்கு ரோமப் பேரரசையும் ஒன்றாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.
1006 – மிகவும் ஒளி கூடிய சுப்பர்நோவா எஸ்.என் 1006 லூப்பஸ் என்ற விண்மீன் கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது.
1483 – இந்த நாளில் புளூட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்துள் வந்தது. இது அங்கு ஜூலை 23, 1503 வரை அங்கு இருந்தது.
1803 – ஐக்கிய அமெரிக்கா லூசியானா மாநிலத்தை பிரான்சிடம் இருந்து 15 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது.
1838 – நிக்கராகுவா மத்திய அமெரிக்கக் கூட்டமைப்பில் இருந்து விடுதலையை அறிவித்தது.
1900 – ஹவாய் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு பகுதியானது.
1945 – அடொல்ஃப் ஹிட்லர் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். சோவியத் படையினர் பெர்லினில் ஜெர்மனிய நாடாளுமன்றில் செங்கொடியை ஏற்றினர்.
1955 – இந்திய நடுவன் வங்கியான பாரத ரிசர்வ் வங்கியால் இந்திய இம்பீரியல் வங்கியை பாரத ஸ்டேட் வங்கி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.


1975 – வியட்நாம் போர்: கம்யூனிசப் படைகள் சாய்கோன் நகரைக் கைப்பற்றினர். தென் வியட்நாமியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்ததில் வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது.
1982 – திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1991 – யாழ்ப்பாணம் நீராவியடியில் நிகழ்ந்த வெடி விபத்தில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
1993 – ஜெனீவாவில் ஐரோப்பிய அணுக்கருவியல் ஆய்வு அமைப்பில் உலகளாவிய வலையமைப்பு பிறந்தது.
1999 – ஆசியான் அமைப்பில் கம்போடியா இணைந்து கொண்டது.
2006 – ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் கடத்தப்பட்ட சூரியநாராயணா என்ற இந்தியப் பொறியியலாளர் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

பிறப்புகள்
1777 – கார்ல் ஃப்ரெடெரிக் காஸ், கணிதவியலர் (இ. 1855)
1870 – தாதாசாஹெப் பால்கே, இந்திய திரைப்படத்துறையின் முன்னோடி (இ. 1944)
1959 – சிரீபன் கார்ப்பர், கனடாவின் 22வது பிரதமர்
1961 – ஐசேயா தாமஸ், முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்
1945 – அடொல்ஃப் ஹிட்லர், ஜெர்மனியை ஆண்ட ஆஸ்திரிய சர்வாதிகாரி (பி. 1889)


1961 – லோங் அடிகள், யாழ்ப்பாணத்தில் பணி புரிந்த அயர்லாந்து அடிகள் (பி. 1896)

சிறப்பு நாள்
வியட்நாம் – விடுதலை நாள் (1975)
மெக்சிக்கோ – சிறுவர் நாள்.

No comments:

Post a Comment

Adbox