பட்டர் ஃபுரூட் என்று அழைக்கப்படும் பச்சை நிற வெண்ணெய் பழம்தான் அவகாடோ. இந்த விசித்திரமான ருசியான பழத்தின் பூர்விகம் மெக்ஸிகோ.
இதில் பழத்தில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவை காணப்படுகின்றனர். இப்பழம் மனிதனின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதில் சிறப்பான பழம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றனர்.
அவகாடோ பழத்தை தொடர்ந்து டயட்டில் சேர்த்து வந்தால் உடலில் உள்ள கொலஸ்ட்ரோல் பிரச்சனைகள் குறையும். மேலும் இது உடலில் கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைத்து நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும்.அவகாடோ பழத்தில் நார்ச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளதால் உடல் எடையைக் குறைக்கவும்,
உயர் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவும். மேலும் செரிமான பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றையும் சீராக்கும்.இரத்த அழுத்தத்தை சீராகப் பராமரிப்பதற்கு பொட்டாசியம் நிறைந்த உணவுகள் உதவும். பொட்டாசிய சத்து உடலில் குறைந்ததால் தான் இரத்த அழுத்த பிரச்சனை வரும். இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இப்பழம் மிகவும் நல்லது.

இப்பழத்தில் உள்ள ஒலியிக் அமிலம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும். சிறுநீரக பிரச்சனைகளும் வராமல் இருக்க அவகாடோ பழத்தை அடிக்கடி உட்கொள்ளலாம்.அவகாடோவில் லுடீன் மற்றும் ஸீக்ஸாக்தைன் பண்புகள் அடங்கியுள்ளது. இந்த கரட்டினொய்டுகள் கண் புரை மற்றும் மாகுலர் திசு செயலிழப்பு ஏற்படுவதைக் குறைக்க உதவும். மேலும் கண் பார்வை பிரச்சினைகளையும் சரிசெய்து ஆரோக்கியமான பார்வைக்கு உதவும்.
அவகேடோ பழத்தில் உள்ள சேர்மங்கள் ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் இதர எலும்பு பிரச்சனைகளை சரிசெய்வதாக தெரிய வந்துள்ளது.
எனவே இப்பழத்தை டயட்டில் சேர்த்து, எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.அவகேடோ பழத்தில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பாலி நியூட்ரியன்ட்டுகள் உள்ளது. இவை நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தி, ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, அதனால் செல்கள் பாதிக்கப்பட்டு புற்றுநோய் வரும் வாய்ப்பைத் தடுக்கும்.

அவகேடோ விதை கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கவும்,வீக்கத்தைக் குறைக்கவும்,இரைப்பை குடல் பிரச்னைகளைத் தீர்க்கவும் உதவுகிறது.அவகேடோ விதைகளை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது.பொதுவாக அவகேடோ ஃப்ளேவனால் நிறைந்து உள்ளது.எனவே இது காய்ச்சல் மற்றும் சளியை குணப்படுத்த முடியும்.இவற்றில் உள்ள கேட்டசின்கள் மற்றும் ப்ரோசியானிடின்ஸ் காரணமாக இவை சக்தி வாய்ந்த ஆன்டி-இன்ஃப்ளமேட்டரிகளாகவும் செயல்பட்டு வீக்கத்தைக் குறைக்கவும்,மூட்டு வலிகளை நீக்கவும் உதவுகிறது.
அவகாடோ சதைபகுதியை அழகிற்கு உபயோகப்படுத்தியிருப்போம்.
அதன் விதையும் நல்ல ஸ்க்ரப்பாக நம் சருமத்திற்கு பயன்படுகிறது. அவகாடோ விதையை சிறிது சிறிதாக உடைத்துக் கொள்ளுங்கள். பின் அதனை மிக்ஸியில் போட்டு, பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை 1 ஸ்பூன் எடுத்து, அதனுடன் தேன் கலந்து முகத்தில் தேய்க்கவும். 10 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். ஒருமுறை செய்ததுமே பலனை காண்பீர்கள். சருமம் மிருதுவாக மினுமினுக்கும்.

No comments:
Post a Comment