"

Monday, March 18, 2019

ATM கார்டு இல்லாமலேயே ஏடிஎம்.,மில் பணம் எடுக்கலாம்...!


இந்தியாவிலேயே கார்டு இல்லாமல் ஏடிஎம் மெஷின்களில் பணம் பெறும் வசதியை முதலில் அளிக்கும் வங்கி என்ற பெருமையைப் பெற்றுள்ளது ஸ்டேட் பேங்க் ஆஃப் இண்டியா. இந்த வங்கியின் இந்தியா முழுவதும் உள்ள 16,500 ஏ.டி.எம்.களில் இந்த வசதியை பயன்படுத்தி பணம் எடுத்துக் கொள்ளலாம்.

எஸ்பிஐ வங்கி, கடந்த 2017 நவம்பர் மாதத்தில் யோனோ என்ற டிஜிட்டல் பேங்கிங் வசதியை, மொபைல் ஆப்.,புடன் அறிமுகப் படுத்தியது. இந்த ஆப்பினை தங்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துபவர்கள், இந்த வசதியைப் பெறலாம்.

யோனோ கேஷ் (Yono Cash) என்ற இந்த மொபைல் அப்ளிகேஷன் மூலம், கார்டு இல்லாமலே ஏடிஎம்., மையங்களில் பணம் எடுக்கலாம் என்று கூறப் பட்டுள்ளது. யோனோ கேஷ் மொபைல் அப்ளிகேஷன் மூலம் வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.களில் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கலாம். எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பெற யோனோ கேஷ் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். இந்த அப்ளிகேசனில், உங்கள் வங்கி கணக்கு எண்,கிளை எண் உள்ளிட்ட தகவல்களைக் கொடுத்ததும், அதில் 6 இலக்க யோனோ கேஷ் அடையாள எண்ணை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒன் டைம் பாஸ்வர்ட் - ஓடிபி எஸ்.எஸ்.எம். மூலம் அனுப்பி வைக்கப் பட்டு, உங்கள் கணக்கு உறுதிசெய்யப்படும். அதன் பின்னர், ஏ.டி.எம்.களில் யோனோ கேஷ் எண் மற்றும் பாஸ்வேர்ட்டை பதிவு செய்து பணத்தை நீங்கள் ஏடிஎம் மெஷினில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.
இந்த வகையில் இத்தகைய சேவை அளிக்கும் வங்கிகளில் நாட்டிலேயே முதலாவது வங்கியாக எஸ்பிஐ., இடம் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

Adbox