"

Wednesday, May 22, 2019

வரலாற்றில் இன்று மே 22 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்

வரலாற்றில் இன்று மே 22  உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.

நிகழ்வுகள்
கிமு 334 – மகா அலெக்சாண்டர் தலைமையில் கிரேக்க இராணுவம் பேர்சியாவின் மூன்றாம் டாரியஸ் மன்னனைத் தோற்கடித்தனர்.
1809 – வியென்னாவுக்கு அருகில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் முதற்தடவையாக தோற்கடிக்கப்பட்டன.
1834 – இலங்கையில் சட்டசபையின் முதலாவது கூட்டம் கொழும்பில் இடம்பெற்றது.
1840 – நியூ சவுத் வேல்சுக்கு பிரித்தானியக் குற்றவாளிகளை நாடுகடத்துதல் நிறுத்தப்பட்டது.
1844 – பாரசீக மதகுரு பாப் தனது பாபிசம் என்ற தனது மதக்கொள்கையை வெளியிட்டார். இவரே பஹாய் சமயத்த்தைத் தோற்றுவித்த பகாவுல்லாவின் முன்னோடி எனக் கருதப்படுகிறது.
1906 – ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்.
1915 – ஐக்கிய அமெரிக்காவில் லாசன் முனை வெடித்தது.
1915 – ஸ்கொட்லாந்தில் ஐந்து தொடருந்துகள் ஒன்றோடொன்று மோதியதில் 227 பேர் கொல்லப்பட்டனர். 246 பேர் காயமடைந்தனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: மெக்சிக்கோ நேச நாடுகள் தரப்பில் போரில் குதித்தது.


1958- இலங்கை இனக்கலவரம் – இலங்கையில் ஏற்பட்ட கலவரங்களில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
1960 – தெற்கு சிலியில் நிகழ்ந்த 9.5 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையினால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதுவே இதுவரையில் பதியப்பட்ட அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஆகும்.
1967 – பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் கடைத் தொகுதி ஒன்று தீப்பிடித்ததில் 323 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர்.
1968 – அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஸ்கோர்ப்பியன் மூழ்கியதில் 99 பேர் கொல்லப்பட்டனர்.
1972 – இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்து குடியரசு ஆகியது. . சிலோன், ஸ்ரீலங்கா எனப் பெயர் மாற்றம் பெற்றது. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கத்துவம் பெற்றது.
1990 – வடக்கு யேமன் மற்றும் தெற்கு யேமன் ஆகியன இணைந்து யேமன் குடியரசு ஆகியது.
1990 – விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது.
2004 – நெப்ராஸ்காவில் இடம்பெற்ற சூறாவளியினால் ஹலாம் நகரம் முற்றிலும் அழிந்தது.
பிறப்புகள்
1859 – சேர் ஆர்தர் கொனன் டொயில், துப்பறியும் எழுத்தாளர் (இ. 1930)
1867 – உமையாள்புரம் சுவாமிநாத ஐயர், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1946)
1944 – வை.கோபாலசாமி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தலைவர்.
1926 – தமிழ்வாணன் தமிழக எழுத்தாளர், இதழாசிரியர் (இ.1977)
இறப்புகள்
1885 – விக்டர் ஹியூகோ, பிரெஞ்சு எழுத்தாளர் (பி. 1802)
சிறப்பு நாள்
சர்வதேச பல்லுயிர் பெருக்க தினம்
யேமன் – தேசிய நாள்
இலங்கை – தேசிய வீரர்கள் நாள், குடியரசு நாள் (1972).

No comments:

Post a Comment

Adbox