இந்தியாவிற்கு தற்போது மிக பெரிய பேராபத்து தண்ணீரால் வர விருப்பத்தை நாசா வெளியிட்ட புகைப்படத்தை ஆராய்ச்சி செய்ததன் மூலம் கண்டறிந்துள்ளனர்.உலகம் முழுவதும் உள்ள சுமார் 5 லட்சம் அணைகளை படம்பிடித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அணைகளில் உள்ள நீரின் அளவு மிக வேகமாக குறைந்து வருகிறது. இதனால் இந்தியா ,மொராக்கோ,ஸ்பெயின் போன்ற நாடுகள் பெருமளவு பாதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலை அப்படியே நீடித்தால் விரைவில் நீரின் அளவு வெகுவாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையானது தட்பவெப்ப மாற்றம் ,
நீரினை வீணாக்குதல் போன்ற காரணங்களால் உண்டானதாக கூறபடுகிறது. மேலும் கேப்டவுன் நகரில் ஏற்பட்ட DAY ZERO வை போல இந்தியாவிலும் விரைவில்" DAY ZERO " நிலை ஏற்படும் என விஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.முதலில் பெங்களூரில் இந்த நிலை கூடியவிரைவில் ஏற்படும் என கூறப்பட்ட நிலையில் ,தற்போது ஒட்டுமொத்த இந்தியாவும் இந்தநிலைக்கு உள்ளாகும் என்ற செய்தி அதிர்ச்சியை உண்டாகியுள்ளது.
No comments:
Post a Comment