"

Thursday, March 28, 2019

செட்டாப் பாக்ஸ் மாற்றாமல் டிடிஎச் சேவையை மாற்றலாம் - மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்


செட்டாப் பாக்ஸ் மாற்றாமல் டிடிஎச் சேவையை மாற்றலாம்

DTH நிறுவனங்களை மாற்ற நினைத்தால் , செட்டாப் பாக்ஸ் மாற்றமல் சேவை வழங்கும் நிறுனத்தை மாற்றிக் கொள்ளும் வசதி  இந்த வருட இறுதிக்குள் டிராய் அறிமுகம் செய்ய உள்ளது.மொபைல் நம்பர் போர்ட்டெபிலிட்டி (MNP) போல செட்டாப் பாக்ஸ் மாற்றாமல் வேறு டிடிஎச் நிறுவனங்களுக்கு மாற்ற இயலும்.

மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், சமீபத்தில் விருப்பமான டிவி சேனல்களை மட்டும் பெறும் வகையிலான டிடிஎச் , கேபிள் ஆப்ரேட்டர்களுக்கான விதிமுறையை வகுத்து வெளியிட்டுள்ளது.


இந்நிலையில், திறந்தவெளி மென்பொருள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள புதிய செட்டாப் பாக்ஸ் பயன்படுத்துவதனால், ஒரு நிறுவன சேவையிலிருந்து மற்ற நிறுவனத்தின் சேவைக்கு மாற்ற செட்டாப் பாக்ஸ் மாற்ற வேண்டிய அவசியமிருக்காது என டிராய் இயக்குநர் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Adbox