"

Thursday, March 28, 2019

கார்டு நம்பர், சிவிவி எண் உள்ளிட்ட எதுவும் இல்லாத புதிய வகையான கிரிடிட் கார்டை அறிமுகப்படுத்தி உள்ளது ஆப்பிள் நிறுவனம்


அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் நடைபெற நிழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் புதிய வகையான கிரிடிட் கார்டை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த கிரிடிட் கார்டானது நாம் வழக்கமாக உபயோகப்படுத்தும் கிரிடிட் கார்டு போல இல்லாமல் புதிய முறையில்  உருவாக்கப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதிகள் குறித்து விளக்கம் அளித்தார்.ஆப்பிள் கார்டு என அழைக்கப்படும்.

இந்த‌ கிரெடிட் கார்டினை 'ஆப்பிள் பே' பயன்படும் அனைத்து சேவைகளிலும் பயன்படுத்தலாம் மேலும் பயனர்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் பயனர்கள் வாங்கும் பொருட்கள் மற்றும் அவற்றை எங்கு வாங்கினார்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் எதுவும் சேகரிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆப்பிள் கார்டில் கிரெடிட் கார்டு நம்பர், சிவிவி எண் உள்ளிட்ட எதுவும் இடம்பெற்றிருக்காது. ஆனால், கிரெடிட் கார்ட் குறித்த தகவல் அனைத்தும் ஐபோனின் வாலெட் பகுதியில் இடம்பெற்றிருக்கும். அதோடு, ஆப்பிள் கிரெடிட் கார்டு கொண்டு பயனர்கள் வாங்கும் பொருட்கள் மற்றும் அவற்றை எங்கு வாங்கினார்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் எதுவும் சேகரிக்கப்படாது.

ஆப்பிள் கார்டு‌ மூலம் செய்யும் பரிமாற்றங்களுக்கு வாழ்நாள் முழுவதும் 2 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படுவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி கிரெடிட் கார்ட் கட்டணத்தை தாமதாக செலுத்தினால் எவ்வித கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் இன்னும் இந்த வசதி கொண்டுவரப்படவில்லை. விரைவில் இந்திய பயனாளர்களும் இந்த வசதியை பெறலாம் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Adbox