வரலாற்றில் இன்று மார்ச் 5 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.
நிகழ்வுகள்
1770 – பாஸ்டன் படுகொலை: பாஸ்டனில் அமெரிக்கர்களுக்கும் பிரித்தானியப் படையினருக்கும் இடையில் கிளம்பிய கலவரத்தை அடுத்து ஐந்து அமெரிக்கர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1793 – பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவினால் தோற்கடிக்கப்பட்டன.
1824 – பிரித்தானியர் பர்மாவின் மீது போர் தொடுத்தனர்.
1940 – சோவியத் உயர்பீடம் 40,100 போலந்துப் பிரஜைகளுக்கு மரணதண்டனை அளித்து கையொப்பமிட்டது.
1964 – இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுலாகியது.
2008 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை செய்யப்பட்டார்.
பிறப்புக்கள்
1871 – ரோசா லக்சம்பேர்க், மார்க்சிய மெய்யியலாளர் (இ. 1919)
1886 – டொங் பிவு (Dong Biwu), சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர் (இ. 1975)
1913 – கங்குபாய், இந்துஸ்தானி இசைப் பாடகி (இ. 2009)
1934 – Daniel Kahneman, நோபல் பரிசு பெற்ற இசுரேலியர்
1973 – த. ஜெயசீலன், ஈழத்து எழுத்தாளர்
இறப்புக்கள்
1878 – ரி. சின்னத்தம்பி, உடுப்பிட்டியைச் சேர்ந்த ஈழத்துப் புலவர்
1953 – ஜோசப் ஸ்டாலின், சோவியத் தலைவர் (பி. 1878)
1966 – அன்னா அக்மதோவா, ரசியக் கவிஞர் (பி. 1889)
No comments:
Post a Comment