"

Tuesday, March 5, 2019

இந்திய விமானப்படை விமானி விங் கமாண்டர் அபிநந்தன் செயல்கள் மூலமாக நாம் கற்று கொள்ளவேண்டியது முக்கியமான விஷயங்கள்


அபிநந்தன் அவர்கள்  பாகிஸ்தான் மண்ணில் செய்த ஒவ்வொரு செயலையும், 


ஒவ்வொரு வார்த்தைகளையும் நாம் உற்று கவனித்தால் நமக்கு பல விஷயங்களை அவர் கற்று கொடுத்துள்ளார்.

விமானம் சுடப்பட்டவுடன் தனது விமானத்திலிருந்து குதித்த அபிநந்தன், காற்றின் ஆக்கிரமிப்பு காரணமாக பாகிஸ்தான்குள் இறங்கினார். அதேபோலத்தான் பாகிஸ்தான் விமானியும், காஷ்மீருக்குள் இறங்கினார்..

இவரை பாகிஸ்தான் பொதுமக்கள் பிடித்து விட்டனர், அடித்தும் துன்புறுத்தினர்,  பாகிஸ்தான் ராணுவம் அவரை கைது செய்தது. பின்னர் அவரிடம் பல்வேறு விசாரணை மேற்கொண்டது. இதில் சில விடியோ பதிவுகளை வெளியிட்டது.  அதில் அவர் தன்னுடைய நிலைப்பாட்டையும் அனுபவத்தையும்  தன்னம்பிக்கையும் துணிச்சலாக வெளிப்படுத்தி இருந்தார்..

எந்த சூழ்நிலையிலும் பதட்டப்படக்கூடாது எதையும், எளிதாக கையாள பழகிக்கொள்ளவேண்டும். கடுமையான சூழலில் அமைதியாக இருக்கவேண்டும் (தரையிறங்கிய பின்ன பாகிஸ்தானியர்கள் வன்முறை தாக்குதல்களில் ஈடுபடும்போதும் கூட ),

அதேபோல் எதிரிகளுக்கு என்ன விஷயம் தெரியவேண்டுமா(பெயர் வேலை எங்கள், வந்த இடம்) அதை மட்டும் கூறுவது மற்றும் என்ன விஷயம் தெரியக்கூடாதோ அதை சொல்லாமல் இருப்பது (பணியின், தன்மை திட்டங்கள், ராணுவ ரகசியங்கள்) என்று பல விஷயங்களை நமக்கு புரியவைந்திருக்கிறார்.

வாழ்ந்ததால் இந்த மாவீரனை போல மக்கள் வாழவேண்டும். ஒரு எதிரி நாட்டு ராணுவத்திடம் மாட்டிக்கொண்ட பிறகும் எந்த ஒரு பயமுமின்றி தைரியமாக துணிவாக இப்படி பேசவேண்டுமென்றால் அவர் வாழ்வில் எத்தனை அனுபவங்களை பெற்றிருப்பார் எத்தனை எத்தனை பிரின்சிபல் விஷயங்களை வாழ்வில் வகுத்துக்கொண்டு வாழ்ந்து இருப்பார். 

இவர் நிலையில் ராணுவ வீரராக இல்லாமல் சாதாரண மனிதராக நாம் பாகிஸ்தான் ராணுவத்திடம் இது போன்று மாட்டி இருந்தால் நம் மனம் எப்படி இருந்திருக்கும். ஒரே ஒரு நிமிஷம் யோசித்து பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

Adbox