"

Friday, March 22, 2019

வரலாற்றில் இன்று மார்ச் 22 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்

வரலாற்றில் இன்று மார்ச் 22 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.

நிகழ்வுகள்
1622 – வேர்ஜினியாவில் ஜேம்ஸ்டவுன் நகரில் அல்கோன்கியான் பழங்குடிகள் 347 ஆங்கில குடியேற்றவாசிகளைப் படுகொலை செய்தனர்.


1829 – கிரேக்கத்துக்கான எல்லைகளை மூன்று வல்லரசுகளான பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியன வரையறுத்தன.
1873 – புவேர்ட்டோ ரிக்கோவின் ஸ்பானிய தேசிய சபையில் அந்நாட்டில் அடிமைத் தொழிலை அழிக்க சட்டமியற்றப்பட்டது.
1895 – முதன் முதலாக லூமியேர சகோதரர்கள் அசையும் திரைப்படத்தை பிரத்தியேகமாகக் காண்பித்தார்கள்.
1939 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி லித்துவேனியாவிடம் இருந்து மெமெல் பிரதேசத்தைக் கைப்பற்றியது.
1943 – இரண்டாம் உலகப் போர்: பெலாரசின் காட்டின் நகர மக்கள் அனைவரும் நாசி ஆதிக்கவாதிகளால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.
1945 – அரபு கூட்டமைப்பு கெய்ரோவில் அமைக்கப்பட்டது.
1960 – ஆர்தர் ஷாவ்லொவ், மற்றும் சார்ல்ஸ் டவுன்ஸ் ஆகியோர் லேசருக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்கள்.
1965 – இலங்கையில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்தது.
1993 – இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் chip (80586) இனை அறிமுகம் செய்தது.
1995 – சோவியத் விண்வெளிவீரர் வலேரி பொல்யாக்கொவ் விண்ணில் 438 நாட்கள் கழித்துவிட்டு பூமி திரும்பினார்.


1997 – ஹேல்-பொப் வால்வெள்ளி பூமிக்குக் கிட்டவாக வந்தது.
2004 – ஹமாஸ் இயக்கத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவரான அஹமது யாசின் இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
2006 – பாஸ்க் ஆயுதக்குழு ஈடிஏ காலவரையறையற்ற போர் நிறுத்தத்தை அறிவித்தது.
பிறப்புக்கள்
1868 – ரொபேர்ட் மில்லிக்கன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1953)
1931 – பேர்ட்டன் ரிக்டர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
1938 – கோவை மகேசன், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், இலங்கை (இ. ஜூலை 4 1992
இறப்புக்கள்
1627 – பிலிப்பே டி ஒலிவேரா, யாழ்ப்பாணத்தின் முதலாவது போர்த்துக்கேய ஆளுநர்.
1952 – டி. எஸ். சேனநாயக்கா, இலங்கையின் முதலாவது பிரதமர் (பி. 1884)
2005 – ஜெமினி கணேசன், தமிழ்த் திரையுலக நடிகர் (பி. 1920)

சிறப்பு நாள்
உலக நீர் நாள்.

No comments:

Post a Comment

Adbox