"

Thursday, March 21, 2019

வரலாற்றில் இன்று மார்ச் 21 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்

வரலாற்றில் இன்று மார்ச் 21 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.

நிகழ்வுகள்
1413 – ஐந்தாம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
1556 – கண்டர்பரி பேராயர் தொமஸ் கிரான்மர் ஒக்ஸ்போர்ட் நகரில் எரியூட்டிக் கொல்லப்பட்டார்.


1788 – லூசியானாவின் நியூ ஓர்லென்ஸ் நகரில் நிகழ்ந்த பெரும் தீயினால் 25 விழுக்காடு நகர மக்கள் கொல்லப்பட்டனர்.
1800 – ரோம் நகரில் இடம்பெற்ற கலகங்களை அடுத்து கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர்கள் நகரை விட்டு அகற்றப்பட்டதை அடுத்து, வெனிஸ் நகரில் ஏழாம் பயஸ் பாப்பரசராகப் பதவியேற்றார்.
1801 – பிரித்தானியா மற்றும் பிரெஞ்சுப் படைகளுக்கிடையில் எகிப்தின் அலெக்சாந்திரியா நகரில் போர் இடம்பெற்றது.
1844 – பஹாய் நாள்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி இந்நாள் முதலாம் ஆண்டு முதலாம் நாள் ஆகும்.
1857 – டோக்கியோவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 100,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
1905 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது புகழ் பெற்ற சிறப்புச் சார்புக் கோட்பாடு கொள்கையை வெளியிட்டார்.
1913 – ஒகைய்யோவில் டேட்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளம் காரணமாக 360 பேர் கொல்லப்பட்டு 20,000 வீடுகள் அழிந்தன.
1917 – டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள் கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1933 – டேச்சு வதை முகாம், நாசிகளின் முதலாவது வதை முகாம், ஜெர்மனியில் அமைக்கப்பட்டது.


1935 – பேர்சியா நாட்டை ஈரான் (ஆரியரின் நாடு) என அழைக்கும்படி ரெசா ஷா வெளிநாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
1945 – இரண்டாம் உலகப் போர்: பர்மாவின் மண்டலாய் நகரை பிரித்தானியப் படைகள் விடுவித்தனர்.
1948 – முகமது அலி ஜின்னா உருது மட்டுமே பாகிஸ்தானின் அரசு மொழியாக இருக்கும் என டாக்காவில் வைத்து அறிவித்தார்.
1960 – நிறவெறி: தென்னாபிரிக்காவில் ஷார்ப்வில் என்ற இடத்தில் கறுப்பின தென்னாபிரிக்க ஆர்ப்பாட்டக்காரரை நோக்கி காவற்படையினர் சுட்டதில் 69 பேர் கொல்லப்பட்டனர்.
1970 – முதலாவது பூமி நாளுக்கான அழைப்பை சான் பிரான்சிஸ்கோ மேயர் ஜோசப் அலியோட்டோ விடுத்தார்.
1980 – ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்து மொஸ்கோவில் 1980 கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுகளைப் பகிஷ்கரிப்பதாக ஐக்கிய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.
1984 – மணலாறு பிரதேசத்தைத் தடைவலயமாக்கி இலங்கை அரசு அங்கிருந்த தமிழர்களை அடித்து விரட்டினர்.
1990 – 75 ஆண்டுகால தென்னாபிரிக்க ஆட்சியிலிருந்து நமீபியா விடுதலை பெற்றது.
1994 – ஸ்டீவன் ஸ்பில்பேர்க் இயக்கிய Schindler’s List ஏழு ஆஸ்கார் விருதுகளை வென்றது.
1998 – புனித வெள்ளி உடன்பாடு வடக்கு அயர்லாந்தில் எட்டப்பட்டது.
பிறப்புக்கள்
1768 – ஜோசப் ஃபூரியே, பிரெஞ்சுக் கணிதவியலாளர் (இ. 1830)
1807 – சைமன் காசிச்செட்டி, 202 தமிழ்ப் புலவர்களின் வரலாறு கூறும் தமிழ் புளூட்டாக் நூலை எழுதிய ஈழத்தவர்.
1867 – பாண்டித்துரைத் தேவர், தமிழறிஞர் (இ. 1911)


1916 – பிஸ்மில்லா கான் உலகப் புகழ்பெற்ற ஷெனாய் இசை மேதை (இ. 2006)
1922 – முஜிபுர் ரகுமான், வங்காள தேசப் பிரதமர் (இ. 1975)
1923 – பொள்ளாச்சி நா. மகாலிங்கம், தமிழகத் தொழிலதிபர், மக்கள் சேவையாளர் (இ. 2014)
1932 – வால்டர் கில்பேர்ட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர்.
1936 – காமினி பொன்சேகா, சிங்களத் திரைப்பட நடிகர் (இ. 2004)
இறப்புக்கள்
  2008 – க. சச்சிதானந்தன், ஈழத்துத் தமிழறிஞர், (பி. 1921)
சிறப்பு நாள்
  உலக கவிதை நாள்
    உலக வன நாள்
    நமீபியா – விடுதலை நாள் (1990)
    தென்னாபிரிக்கா – மனித உரிமைகள் நாள்
    உலக செய்யுள் நாள் – யுனெஸ்கோ.

No comments:

Post a Comment

Adbox