5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழகத்தில் இந்த ஆண்டே பொதுத்தேர்வு நடத்தப்படும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு:
ரிலைன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் 453 கோடி பணத்தை வழங்க வேண்டும்.
அனில் அம்பானி குற்றவாளி பணத்தை கொடுக்கவில்லை என்றால் 3 மாதம் சிறை தண்டனை உச்சநீதிமன்றம் அறிவிப்பு.
பிரான்ஸ் நாட்டு இணைய பாதுகாப்பு ஆய்வாளர் எல்லியாட் ஆல்டர்சன் என்பவர் இண்டேன் நிறுவனம் தனது வாடிகையாளர்களின் ஆதார் தகவல்களை வெளியிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த வகையில் தற்போது 67 லட்சம் இண்டேன் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது .
பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓய்வூதியதாரர்களுக்கும் 3சதவீத அகவிலைப்படி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 9 சதவீதம் அளித்து வந்த நிலையில் தற்போது 3 சதவீதத்துடன் சேர்ந்து 12 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாஜகவை சேர்ந்த ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று நேரில் சந்தித்தார். அப்போது, அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்கப்படும். மேலும், பலியான வீரர்களின் குழந்தைகளின் கல்விச்செலவையும் ஏற்றுக் கொள்கிறோம் என வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் இன்று தெரிவித்துள்ளார்.
மாணவ-மாணவிகளுக்கு புதிய வண்ண சீருடை வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும். இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவ-மாணவியர் தமிழகத்திலேயே எழுதலாம். இதற்காக வெளிமாநிலம் செல்ல அவசியமில்லை. தமிழகத்தில் 550 தேர்வு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
வடகொரியாவுடனான அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்ததற்காக ஜனாதிபதி டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க என வேண்டும் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே பரிந்துரைத்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட தேமுதிக 7 தொகுதிகளைக் கேட்கிறது. ஆனால் 3 தொகுதிகள் மட்டுமே தர அதிமுக தயாராக உள்ளது. இதனை தேமுதிக ஏற்க மறுத்து வருகிறது. இதன் காரணமாக அதிமுக - தேமுதிக கூட்டணி ஏற்படுவதில் தொடர் சிக்கல் நீடித்து வருகிறது.
நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.25,568க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3,196-க்கு விற்பனை செய்யப்பட்டது.தங்கம் விலை உயர்விற்குக் காரணமாக சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம் திருமணம் போன்ற அனைத்து சுபக் காரியங்கள் காரணங்களாக சொல்லப்படுகிறது.
உயிரிழந்த வீரர்களில் 23 பேர் எஸ்.பி.ஐ. வங்கியில் பெற்றக் கடன் தொகை தள்ளுபடி செய்வதாகவும் மேலும் அவர்களுக்கானக் காப்பீட்டுத் தொகையாக ஆளுக்கு தலா 30 லட்சம் ரூபாய் அளிக்க உள்ளதாகவும் எஸ்.பி.ஐ. வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சானியா மிர்சா, தீவிரவாத தாக்குதலை கண்டித்து நான் மொட்டை மாடியில் நின்று கொண்டு கூவ வேண்டுமா? என்று தனது டுவிட்டரில் ஆவேசமான ஒரு டுவீட்டை பதிவு செய்தார்.
40 வீரர்கள்உயிரிழப்புக்கு காரண மான தாக்குதலை நடத்த சதித் திட்டம் தீட்டிய, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த கம்ரன், பாதுகாப்பு படையினரால், சுட்டுக் கொல்லப்பட்டான்.பாதுகாப்பு படையைச் சேர்ந்த நான்கு வீரர்களும், இதில்உயிரிழந்தனர்.
No comments:
Post a Comment