"

Wednesday, February 20, 2019

வரலாற்றில் இன்று பிப்ரவரி 20 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்

வரலாற்றில் இன்று பிப்ரவரி 20  உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.




நிகழ்வுகள்
1547 – ஆறாம் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
1627 – யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளியில் சிக்கி பலர் இறந்தனர்.
1798 – பாப்பரசர் ஆறாம் பயஸ் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1835 – சிலியின் கொன்செப்சியோன் நகரம் நிலநடுக்கத்தில் அழிந்தது.
1910 – எகிப்தியப் பிரதமர் பூட்ரோஸ் காலி (Boutros Ghali) கொல்லப்பட்டார்.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா எனிவெட்டாக் தீவைக் கைப்பற்றியது.
1962 – மேர்க்குரி திட்டம்: ஜோன் கிளென் பூமியை மூன்று முறை சுற்றி பூமியைச் சுற்றிய முதலாவது அமெரிக்கர் என்ற புகழைப் பெற்றார்.
1965 – அப்பலோ விண்கலங்கள் சந்திரனில் இறங்குவதற்கான இடங்களை வெற்றிகரமாகப் படங்கள் எடுத்த ரேஞ்சர் 8 விண்கலம் சந்திரனுடன் மோதியது.
1987 – அருணாசலப் பிரதேசம் அசாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமாகியது.
2002 – எகிப்தில் தொடருந்து ஒன்று தீப்பிடித்ததில் 370 பேர் கொல்லப்பட்டனர்.


பிறப்புகள்
1876 – கா. நமச்சிவாயம், தமிழறிஞர் (இ. 1936)
1937 – ரொபேர்ட் ஹியூபர், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய வேதியியலாளர்
1945 – ஜியார்ஜ் ஸ்மூட், அமெரிக்க விண்ணியல் அறிஞர்
1963 – சார்ல்ஸ் பார்க்லி, அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
1977 – ஸ்டெஃபான் மார்பெரி, அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்.

இறப்புகள்
1896 – ஆணல்ட் சதாசிவம்பிள்ளை, ஈழத்தின் தமிழறிஞர், புலவர் (பி. 1820)
1907 – ஹென்றி முவாசான், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு வேதியியலாளர், (பி. 1852)
1916 – கிளாஸ் ஆர்னல்ட்சன், நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளர் (பி. 1844)
1972 – மரீயா கோப்பர்ட்-மேயெர், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய இயற்பியலாளர், (பி. 1906)
1976 – ரெனே காசின், நோபல் பரிசு பெற்றவர். (பி. 1887)
2008 – டி. ஜி. எஸ். தினகரன், கிறித்துவ மறைபரப்புனர் (பி. 1935)
2011 – மலேசியா வாசுதேவன், பாடகர், நடிகர்.

No comments:

Post a Comment

Adbox