"

Tuesday, February 19, 2019

வரலாற்றில் இன்று பிப்ரவரி 19 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்

வரலாற்றில் இன்று பிப்ரவரி 19  உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.


நிகழ்வுகள்
1600 – பெருவின் ஹுவாய்நப்பூட்டினா என்ற எரிமலை வெடித்தது.
1674 – இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டதில் மூன்றாவது ஆங்கில-டச்சு போர் முடிவுக்கு வந்தது. இதன்படி டச்சு குடியேற்றப் பகுதியான நியூ ஆம்ஸ்டார்டாம் இங்கிலாந்துக்குக் கொடுக்கப்பட்டு நியூ யோர்க் எனப் பெயர் மாற்றப்பட்டது.
1819 – பிரித்தானியாவின் நாடுகாண் பயணி வில்லியம் ஸ்மித் தெற்கு ஷெட்லாந்து தீவுகளைக் கண்டுபிடித்தார்.
1876 – ஆங்கில இதழ் யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் (Jaffna Catholic Guardian) முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.
1878 – கிராமபோனின் காப்புரிமத்தை தோமஸ் எடிசன் பெற்றார்.
1915 – முதலாம் உலகப் போர்: கலிப்பொலி போர் ஆரம்பமாயிற்று.
1942 – இரண்டாம் உலகப் போர்: கிட்டத்தட்ட 250 ஜப்பானியப் போர் விமானங்கள் ஆஸ்திரேலியாவின் வட மண்டலத்தின் தலைநகர் டார்வின் மீது குண்டுகளை வீசியதில் 243 பேர் கொல்லப்பட்டனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை – 30,000 ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் இவோ ஜீமா தீவில் தரையிறங்கினர்.
1959 – ஐக்கிய இராச்சியம் சைப்பிரசுக்கு விடுதலையை வழங்கியது.
1968 – சைப்பிரசின் லனார்க்கா விமான நிலையத்தில் கடத்தப்பட்ட எகிப்திய விமானத்தை விடுவிக்க சைப்பிரசின் முன் அநுமதியின்றி தாக்குதலில் ஈடுபட்ட எகிப்திய அதிரடிப் படைகளை சைப்பிரஸ் இராணுவத்தினர் தாக்கியட்தில் 15 எகிப்திய படைகள் கொல்லப்பட்டனர்.
1985 – ஸ்பெயினில்வின் போயிங் விமானம் ஒன்று ஓயிஸ் மலையில் மோதியதில் 148 பேர் கொல்லப்பட்டனர்.
1986 – சோவியத் ஒன்றியம் மீர் விண்வெளி நிலையத்தை விண்ணுக்கு ஏவியது.
1986 – அம்பாறை உடும்பன்குளம் படுகொலை: அம்பாறையின் உடும்பன்குளத்தில் 60 விவசாயிகள் இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டனர்.
2014 – இராஜிவ் காந்தி கொலை வழக்கு: குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேரையும்
விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.
பிறப்புகள்
1473 – நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், கணிதவியலாளர், விண்வெளியியலாளர். (இ. 1543)
1627 – சிவாஜி, இந்தியப் பேரரசர் (இ. 1680)
1821 – ஆகஸ்ட் சிலெய்ச்சர், செருமானிய மொழியியலாளர் (இ. 1868)
1855 – உ. வே. சாமிநாதையர், தமிழறிஞர் (இ. 1942)
1859 – சுவாந்தே அறீனியசு, சுவீடிய வேதியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1927)
1930 – கே. விஸ்வநாத், இந்திய நடிகர், இயக்குநர்
1953 – கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் தெ கிர்ச்னர், 55வது அர்ச்சென்டீன அரசுத்தலைவர்
1960 – இளவரசர் ஆண்ட்ரூ, யார்க் கோமகன்
இறப்புகள்
1897 – கார்ல் வியர்ஸ்ட்ராஸ், செருமானியக் கணிதவியலர் (பி. 1815)
1915 – கோபால கிருஷ்ண கோகலே, இந்திய அரசியல்வாதி (பி. 1866)
1962 – ஜியார்ஜியோ பாபனிகொலாவு, பாப் சோதனையைக் கண்டுபிடித்தவர் (பி. 1883)
1988 – எஸ். வி. சகஸ்ரநாமம், நாடகக் கலைஞர், திரைப்பட நடிகர் (பி. 1913)
1997 – டங் சியாவுபிங், சீன அரசியல்வாதி, 1வது உதவிப் பிரதமர் (பி. 1904)
2012 – பெடரிக்கு இசுட்டால், டச்சு மெய்யியலாளர் (பி. 1930).

No comments:

Post a Comment

Adbox