"

Sunday, February 17, 2019

இன்றய நாள் இதுவரை முக்கிய செய்திகள் தொகுப்பு ஓர் லைவ் அப்டேட் பிப்ரவரி 18


புல்வாமா மாவட்டத்தில், தற்கொலை படை தாக்குதலை அடுத்து, பயங்கரவாதிகளுக்கு எதிராக, மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை, நாடு முழுவதும் வலுத்து வருகிறது. துல்லியத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம், பாக்., பயங்கரவாதிகள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது. எனவே, அவர்களை, எல்லை பகுதிகளில் இருந்து, அருகில் உள்ள ராணுவ முகாம்களுக்கு, பாக்., அரசு இடம்பெயரச் செய்துள்ளதாக, தகவல்கள் கூறுகின்றன. 


கரும்பு தோட்டங்கள், வயல்வெளிகளுக்குள் புகுந்து பயிர்களை தின்று நாசம் செய்து வந்தது. கடைசியாக கண்ணாடிபுதூரில் முகாமிட்டிருந்த சின்னதம்பி யானை விவசாயிகளை திணறடித்தது. இதனால் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி மயக்க ஊசி செலுத்தி சின்னதம்பி யானை பிடிக்கப்பட்டது. வரகளியாறு முகாமில் அடைக்கப்பட்டுள்ள சின்னதம்பி யானைக்கு தினை, சோளம், பசுந்தீவனங்களுடன் சமைக்கப்பட்ட உணவு வழங்கப்படுகிறது. பயிற்சிக்குப் பின்னர் வனத்தில் நடமாடவிட வனத்துறை முடிவு செய்துள்ளது.

ஐதராபாத் அருகே உள்ளது சிஎம்ஆர் ஷாப்பிங்மாலில்  ஒரு சேலை 10 ரூபாய் என தள்ளுபடி விலைக்கு சேலை விற்பனை செய்யப்பட்டது. இந்த செய்தி காட்டுத் தீ போல பரவியதால் ஷாப்பிங் மாலில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.  இதனால் நூற்றுக்கணக்கான பெண்கள் ஒரே நேரத்தில் கடையின் ஷட்டரை உடைத்துக்கொண்டு உள்ளே போக முயற்சி செய்ததால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்பாகங்கள் என்று குறிப்பிட்டு, ஒரு பாத்திரத்தில் சில கரித்துண்டுகளுடன் போலியான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்படிப்பட்ட போலியான புகைப்படங்களை யாரும் பகிர வேண்டாம் என மத்திய ரிசர்வ் போலீஸ் படை - சிஆர்பிஎப் வேண்டுகோள் விடுத்துள்ளது.


இந்தி மொழியை மூன்றாவது அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்க அபுதாபி தொழிலாளர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. ஏராளமானோர் பேசக்கூடிய மொழியாக இருப்பதால் அதனை அங்கீகரிப்பதாக நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. இந்தி மொழியை இந்தியர்கள் மட்டுமல்லாமல் பங்களாதேஷ் நேபாளம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த தொழிலாளர்களும் அறிந்து வைத்திருப்பதால், இதனை அங்கீகரிக்க தொழிலாளர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

சிஆர்பிஎஃப் வீரர்கள் மீதான தற்கொலைப் படை தாக்குதலை நடத்த, பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவாறு ஜெய்ஸ்- இ-முகமது தீவிரவாத இயக்க தலைவர் மசூத் அஜார் உத்தரவு பிறப்பித்த தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானால் வழிநடத்தப்படும் ஜிகாதி தீவிரவாத அமைப்புகளுடன் ஆறு மாதங்களாக எவ்வித கூட்டத்திலும் ஜெய்ஸ்- இ-முகமது இயக்கத் தலைவர் மசூத் அஜார் பங்கேற்கவில்லை.இந்நிலையில், எட்டு நாட்களுக்கு முன்பே சிஆர்பிஎஃப் படை வீரர்கள் மீதான தாக்குதலை நடத்த அசார் உத்தரவிட்ட ஆடியோ வெளிவந்துள்ளது.

திருவான்மியூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜவஹர்லால் சண்முகம் என்பவர் கடந்தாண்டு தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் ஒரு வழக்கு தொடுத்தார். அதில் பக்கிங்ஹாம் கால்வாயில் அதிக அளவில் கட்டுமானக் கழிவுகள், மணற்குவியல்கள், குப்பைகள் இருப்பதால் மழைக்காலத்தில் நீர் செல்ல வழியில்லாமல் வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், அதனால் அந்த கால்வாயைத் தூர் வார வேண்டும் எனவும், அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.  இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த தொகையை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் செலுத்துமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

உங்களின் எல்ஐசி பாலிசி முடியும் தருவாயில் இருக்கிறது எனில், நீங்கள் உடனடியாக உங்களது வங்கிக் கணக்கை உங்கள் பாலிசியுடன் இணைத்ததாக வேண்டும். அப்படி நீங்கள் இணைக்கவில்லை எனில், உங்கள் பணப் பரிமாற்றம் நிறுத்தப்படும். இதுநாள் வரை, செக் மூலமே எல்ஐசி பணம் அளித்து வந்தது. ஆனால், இப்போது வங்கிக் கணக்குகளுக்கே நேரடியாக பணம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது. இதனால் தான் உங்களது வங்கிக் கணக்கை உங்கள் பாலிசியுடன் இணைக்க வேண்டியது கட்டாயமாகிறது. 

பெல்பாஸ்ட் உயிரியல் பூங்காவில் உள்ள சிம்பன்சி குரங்குகளின் அறிவு. சிம்பன்சி  குரங்குகள் அண்மையில்  அடித்த புயல் காற்றில் சில மரக்கிளைகள் உடைந்து விழுந்தன.உடைந்த மரக்கிளையை ஏணியாக்கி, சில சிம்பன்சி குரங்குகள் தப்பிச் சென்றன.

 





No comments:

Post a Comment

Adbox