"

Monday, February 18, 2019

இன்றய நாள் இதுவரை முக்கிய செய்திகள் தொகுப்பு ஓர் லைவ் அப்டேட் பிப்ரவரி 19

அதிமுக-பாமக இடையே இன்று கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை நந்தனம் அருகே உள்ள கிரவுன் பிளாசா ஓட்டலில் இன்று காலை கூட்டணி தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது.அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

நம்மை ஆபத்தில் இருந்து காக்க உதவும்  தொலைபேசி எண்  வெவ்வேறாக இருக்க அவசர சேவைகளை இனி ஒரே எண்களின் மூலம் இணைத்து விட அரசு முடிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட ஒரே குடைக்குள் எல்லா அவசர கால சேவைகளையும் உங்களால் பெற இயலும். இந்த தொலைபேசி எண்   112 .

தேர்தல் கூட்டணி குறித்து ஓரிரு நாட்களில் அதிமுகவின் முடிவு அறிவிக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது வெடிகுண்டுகளுடன் சென்ற தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது. இந்த கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தன் இந்தியாவின் 'மிகவும் வேண்டத்தக்க நாடு' என்ற அந்தஸ்தையும் மத்திய அரசு நீக்கி உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பால் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு 200 சதவீத வரி விதித்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோஹில் மஹ்மூதை அந்நாடு திரும்ப அழைத்துள்ளது.


காஷ்மீர் மாநிலத்தில் நடந்த புல்வாமா தற்கொலைப்படை தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கூகுள் தேடு தளத்தில் உலகின் சிறந்த கழிவறை காகிதம் எது (WORLD'S BEST TOILET PAPER) என கேட்டால் பாகிஸ்தான் கொடி என பதில் வருகிறது. இது டிவிட்டரில் பரப்பப்பட்டு வைரலாகி வருகிறது. 





4ஜி சேவையை பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு வழங்கவேண்டும், பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்லை தனியாரிடம் தாரைவார்க்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் இன்று காலை முதல் நாடு முழுவதும் தொடங்கியது.

வேதாந்தா கோரிக்கையை நிராகரித்த உச்சநீதி மன்றம், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்துள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தை நாட உத்தரவிட்டது.தேசிய பசுமை தீர்ப்பாயத்தின்
 உத்தரவையும் ரத்து செய்துள்ளது.


தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.25,568ஆக உள்ளது. இதன்மூலம் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

பான் எண்ணுடன் தங்களது ஆதார் எண் விவரத்தையும் கட்டயாம் இணைக்கவேண்டும். இதற்கான கடைசி தேதி வரும் மார்ச் 31ஆம் தேதி என மத்திய வருமானவரித் துறை ஆணையம் (சிபிடிடி) தெரிவித்துள்ளது.

கேஷ் பேக், ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிரடி தள்ளுபடி ஆகியவற்றை வழங்கி பிரபலமடைந்த பேடிஎம் சில ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருகிறதாம். மேலும், அடுத்த சில ஆண்டுகளுக்கு கடும் நஷ்டத்தை சந்திக்க வேண்டி இருக்குமாம்.

'காஷ்மீரின் அரிசிக் கிண்ணம்' என்று அழைக்கப்படும் புல்வாமா மாவட்டம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அழகிய மாவட்டமாகும். புல்வாமா மாவட்டம் மாநிலத்தின் கோடைகால தலைநகர் ஸ்ரீ நகரில் இருந்து 40 கிமீ தொலைவிலேயே உள்ளது. அஹர்பால் நீர்வீழ்ச்சி, ஷிகர்கா, அரிபால் நாக், ஹுர்போரா மற்றும் தார்சார் மற்றும் மார்சார் ஏரிகள் இம்மாவட்டத்தை நோக்கி சுற்றுலாப் பயணிகளை படையெடுக்க வைக்கும் சுற்றுலா தலங்களாகும். 





No comments:

Post a Comment

Adbox