"

Sunday, February 17, 2019

இன்றய நாள் இதுவரை முக்கிய செய்திகள் தொகுப்பு ஓர் லைவ் அப்டேட் பிப்ரவரி 17 இன்று நடைபெற முக்கிய தகவல்கள்

ஆங்கில தேதி : பிப்ரவரி 17  கிழமை : ஞாயிறு இன்று : பிரதோஷம், சுபமுகூர்த்த நாள்
நல்ல நேரம் காலை : 06.30 - 07.30 மாலை :01:30 - 02:30


  • லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தமிழக சட்டசபை தேர்தல் தான் எங்களது இலக்கு. நடைபெறவிருக்கும் பார்லிமென்ட் தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்த கட்சிக்கும் கிடையாது. அதனால், ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படத்தையோ, மன்றத்தின் கொடியையோ, எந்த கட்சிக்கும் ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக பயன்படுத்தக்கூடாது. 
  • ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்ட பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுமீது விசாரணை நடைபெற்று முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது.
  • சத்திஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட விவசாய நிலங்களை திருப்பி ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு, நிலத்திற்கான பத்திரங்களை அந்த பகுதியை சேர்ந்த விவசாய மக்களிடம் திருப்பி வழங்கிய, ராகுல்காந்தி, இங்கு டாடா தொழிற்சாலை வராது என்றும் தெரிவித்தார்.
  • கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதாகவும், இந்த படம் சென்சாருக்கு சென்றுள்ளதாகவும் நேற்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், ராணா உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
  • காஷ்மீர் புல்வாமா பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட   சுப்பிரமணி  மற்றும் சிவசந்திரன் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ள தமிழக அரசு, தற்போது, அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் என்றும் அறிவித்து உள்ளது.
  • இலங்கை அணி 86.3 ஓவர்களில் 305 ரன்கள் எடுத்து தென் ஆப்ரிக்கா அணியை அவர்கள் சொந்த மண்ணிலேயே வென்றது. சுமார் 7 ஆண்டுகள் கழித்து தென் ஆப்ரிக்க அணியை இலங்கை அணி இவ்வாறு வென்றுள்ளது
  • நேற்று முன் தினம் பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 45 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் விளைவாக பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் சுங்க வரி 200% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.


  • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் கூடிய கொலிஜியம் ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனை முடிவில் ஒரு தீர்மானம் இயற்றாப்பட்டுள்ளது.அந்த தீர்மானத்தில், 'உயர்நீதிமன்ற நீதிபதிகளாக கொலிஜியத்தினால் பரிந்துரை செய்ய விரும்புவோர் பலருக்கு குறைந்த பட்ச வருமானமான ரூ.7 லட்சத்துக்கும் குறைவாகவே வருகிறது. எனவே திறமையுள்ள இளைஞர்களுக்கும் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர் உள்ளிட்டோருக்கு விலக்கு அளிக்க கொலிஜியம் தீர்மானித்துள்ளது. எனவே இந்த குறைந்த பட்ச வருமானம் ரூ.7 லட்சம் இருக்க வேண்டும் என்னும் விதி நீக்கப்படுகிறது' என தெரிவிக்கபட்டுள்ள்து.
  • இந்து பாரம்பரியம் உள்ள டி.ஆரின் குடும்பத்தில் இருந்து அவரது இளையமகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறிய செய்திதான் இன்று காலை முழுவதும் திரையுலகில் ஹாட் நியுஸ். தனது மகன் இஸ்லாம் மதத்திற்கு மாறியதற்கு டி ஆர் குடும்பம் சம்மதம் தெரிவித்தாலும் அதற்கானக் காரணத்தை வெளியிடவில்லை. இந்நிலையில் குறளரசன் ஒரு இஸ்லாம் மதப்பெண்ணைக் காதலித்து வருவதாகவும் அவரை மணக்க அந்தப் பெண்ணின் பெற்றோர் விதித்த நிபந்தனைகளாலேயே இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல் இன்னும் டி ஆர் குடும்பத்தால் உறுதிப்படுத்தப்படவில்லை.
  • இலங்கை ராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டதை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
    போரில் ராணுவத்தினர் குற்றமிழைத்தனர் என்ற உண்மையை நாட்டின் பிரதமர் முதன்முறையாக பகிரங்கமாகவும் உத்தியோகபூர்வமாகவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
    இதனை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள 10 ஆண்டுகள் எடுத்துள்ளது. இது வரவேற்கப்படவேண்டிய விஷயம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

  • புதிய ஹோண்டா சிவிக் கார 10வது தலைமுறை ஹோண்டா சிவிக் கார் வரும் மார்ச் 7ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காருக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவும் துவங்கப்பட்டு இருக்கிறது. ரூ.31,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கனவே விற்பனையில் இருந்த மாடலில் இருந்து முற்றிலும் புதிய டிசைனுக்கு மாறி விட்டது புதிய ஹோண்டா சிவிக் கார். எல்இடி ஹெட்லைட்டுகள், முன்புறத்தில் புதிய க்ரில் அமைப்பு, சி வடிவிலான எல்இடி டெயில் லைட்டுகள் என ஒட்டுமொத்த தோற்றமும் மிக கவர்ச்சிகரமாக இருக்கிறது.
  • வாட்ஸ்ஆப் சார்பில் புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அது என்னவென்றால் வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை என்ற முறை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் இந்த அம்சம் சேர்க்கப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Adbox