"

Sunday, January 27, 2019

பள்ளிக்கல்விதுறை உத்திரவு ஆசிரியர்கள் எந்தவித துறை நடவடிக்கை இன்றி நாளை பணியில் சேர்ந்து கொள்ளலாம்.



கடந்த ஒரு வாரமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் நாளையதினம் எந்தவிதமான துறை நடவடிக்கை இன்றி அதே பள்ளியில் பணிக்கு சேர்ந்து கொள்ளலாம் எனக் கூறி உள்ளது.  

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் உயர் நீதிமன்ற ஆணைக்கு இணங்க ஆசிரியர்கள் ஜனவரி  25 அன்று பணியில் சேர்ந்து விட வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.  ஆனால் இந்த நாள் வரை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  


இது மாணவர்களின் பள்ளி பயிலும் செயலை மிகக் கடுமையாக பாதிக்க செய்யும். எனவே மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் மீண்டும் காலம் தாழ்த்தாமல் ஜனவரி 28 அன்று எந்தவிதமான நிபந்தனையும் இன்றி அவர் அவர்கள் வேலை செய்த பள்ளியிலேயே பணியை தொடரலாம். 


அவ்வாறு பணியில் சேராமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தால் அவர்களுடைய பணியானது அப்பள்ளியில் காலிபணியிடம் அறிவிக்கப்படும். அந்த பணியிடமானது மாதம் 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். 

பணியில் சேராமல் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவதோடு துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து கடிதம் ஒன்றை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment

Adbox