ஜாக்டோ ஜியோ அமைப்பின் மூலம் ஆசிரியர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், நீதிமன்றம், ஜன.25க்குள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக அரசு. அவர்கள் மீது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று நள்ளிரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டு தலைமை தாங்கிய சிலரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
இந்நிலையில் தொடர் வேலைநிறுத்தத்தில் தமிழகம் முழுவதும் 420 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. திங்கட்கிழமை பணிக்கு வருபவர்கள் மீது நடவடிக்கை கிடையாது. திங்கட்கிழமை பணிக்கு வராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment