"

Sunday, January 27, 2019

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது..! தமிழக அரசு... கைவிரிப்பு.



நிதி நிலைமை கரணம் காட்டி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் வேளையில் அவர்களது கோரிக்கைகளை ஏற்கவே முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. நிர்வாக சீர்த்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அவர்கள் கூறுகையில், ஜாக்டோ - ஜியோ வலியுறுத்தும் கோரிக்கைகள் எல்லாம் அரசால் பரிசீலிக்கப்பட்டு செயல் படுத்த இயலாதவை என பலமுறை எடுத்துக் கூறப்பட்டது. எனினும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தொடங்கி, சில தவறான வழிமுறை களை கடைபிடிப்பது வேதனை தருகிறது. இவர்களின் சில கோரிக்கைகளை நிறை வேற்ற இயலாமைக்கான காரணங்களை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். 

உயரும் ஓய்வூதிய நிதிச் சுமையால் நிர்வாக செலவை ஈடுகட்ட முடியாமல் அரசு திவாலாகும் நிலை உருவாகும் என்பதால் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் உலகம் முழுவதும் 174 நாடுகளில் கொண்டு வரப்பட்டது. நம்நாட்டில் மேற்கு வங்கம் தவிர மற்ற மாநிலங்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. தமிழகத்தில் 2003-ல் இதற்கான சட்டம் இயற்றப்பட்டு அரசு சார்பில் 10 சதவீதமும் ஊழியர் சார்பில் 10 சதவீதமும் பிடித்தம் செய்து இருப்பு வைக்கப்பட்டு வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த சாத்தியக்கூறு உள்ளதா என ஆராய குழு அமைப்போம் என்றுதான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்தார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வோம் என அவர் கூறவில்லை.

அதன்படி, அமைத்த குழுவும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால் மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி இல்லாமல் போகும். அரசு வசூலிக்கும் வரியுடன் கடன் பெற்றுதான் சம்பளம், ஓய்வூதியம் தரவேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளது. எனவே, அரசின் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இந்த கோரிக்கையை ஏற்க இயலாது.

7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி சம்பள உயர்வு வழங்கியதால் வருவாய் பற்றாக்குறை 2017-18ல் ரூ.21,594 கோடியாக உயர்ந்துவிட்டது. இந்த ஆண்டு வருவாய் பற்றாக்குறை ரூ.24 ஆயிரம் கோடியாக உயரும். இதையும் அரசு கடன் பெற்றுதான் செலவு செய்கிறது. இந்நிலையில் ஊதிய நிலுவை வழங்க ரூ.20 ஆயிரம் கோடி கூடுதல் நிதி தேவைப்படுகிறது. இதையும் அரசு கடன் பெற்றுதான் வழங்க முடியும். இதை சமாளிக்க மக்கள் மீது கூடுதல் வரியை திணிக்க வேண்டிய நிலை ஏற்படும். நிதிப் பற்றாக்குறை உயர்வதை தவிர்க்கவும் முந்தைய ஊதியக்குழு வழிமுறையை பின்பற்றி சம்பள உயர்வு, பணப்பயன் வழங்கப்பட்டது. இப்போதைய நிதிநிலையில் ஊதிய நிலுவை கோரிக்கையை ஏற்க இயலாது என்பதை அரசு ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


மத்திய அரசில் இடைநிலை ஆசிரியர் கள் எண்ணிக்கை மிக குறைவு. ஆனால், மாநில அரசில் இவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். மேலும், இதே கல்வித் தகுதியில் இதர துறைகளிலும் ஊழியர்கள் பணிபுரிவ தால் இடைநிலை ஆசிரியர்களுக்கு மட் டும் ஊதிய உயர்வு தர இயலாது. மேலும், ஊதியம் உயர்த்தினால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதுடன், ஊழியர்கள் இடையேயான ஒப்பீட்டு சமநிலையை வெகுவாக பாதிக்கும். எனினும், இடை நிலை ஆசிரியருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் சிறப்பு ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால்தான் இந்த கோரிக்கையையும் ஏற்க இயலாது என பலமுறை கூறியும் அரசை நிர்ப்பந்திக்கும் உள்நோக்குடன் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.




No comments:

Post a Comment

Adbox