தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக இன்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 21 மாத நிலுவை தொகை வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர்களை எல்கேஜி யூகேஜி வகுப்புகளுக்கு பணியமர்த்தக் கூடாது என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
நேற்று ஒரு மாணவன் தொடுத்த வழக்கில் உயர் நீதிமன்றம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு தடை விதித்தது. அவர்கள் வருகின்ற 25ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், தங்களை அரசு அழைத்துப் பேசி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் கூறினார். மேலும் தங்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை ஊடகங்கள் தவறான செய்திகளை மேற்கோள்காட்டி தங்கள் மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாதவர்கள் போன்றும் குற்றம் கூறுவதாக வேதனை தெரிவித்தார். நாங்கள் திடீரென என்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லை இரண்டு ஆண்டுகளாகவே எங்களது போராட்டம் சிறிது சிறிதாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீவிர போராட்டமாக உருவெடுத்துள்ளது. மேலும் அரசு எங்களது கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலனை செய்தால் உடனடியாக நாங்கள் போராட்டத்தை கை விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment