வால்பாறையில் இரண்டு நாட்களாக தன்னுடைய குழந்தைக்கு பாடம் சொல்லித்தர ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை என தன் குழந்தையுடன் தந்தை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று உயர்நீதிமன்றம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை தடைவிதித்தது, வருகின்ற 25ஆம் தேதிக்குள் அவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என எச்சரித்துள்ளது.
இந்நிலையில் வால்பாறையில் உள்ள அரசு பள்ளிக்கு தன் மகளுடன் சென்ற தந்தை. அரசு பள்ளி ஆசிரியர்கள் இல்லாத காரணத்தினால் தன் மகளுடன் சாலை மறியலில் ஆசிரியருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் கூறுகையில் 40,000 ஐம்பதாயிரம் சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் இப்படி டைப் பண்ண என்ன நியாயம்? கல்வி அதிகாரி வரும் வரை நான் இங்கிருந்து செல்ல மாட்டேன் என போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment