பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் தலைமைச் செயலக அரசு பணியாளர் சங்கத்தினர் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
தற்போது வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சாதகமான பதில் அரசிடம் இருந்து பெறப்பட வில்லை என்றால் இந்தப் போராட்டமானது தொடரும் என ஜாக்டோ ஜியோ சங்கம் அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு அளித்து வருகின்றன.
தற்சமயம் தலைமைச் செயலக ஊழியர் சங்கம் ஜாக்டோ ஜியோ அமைப்புக்கு ஆதரவாக வருகின்ற பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் அவர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கு பெறுவதாக அறிவித்து உள்ளனர். மாநிலத்தில் பல்வேறு அமைப்புகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம், மின்சார வாரியம் ஊழியர்கள், அரசு அலுவலர்கள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, வருகின்ற நாட்களில் அவர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தமிழக அரசுக்கு அனேக அரசு ஊழியர் சங்கங்களும் போராட்டத்திற்கு ஆதரவாக தனது நிலைப்பாட்டை எடுக்க துவங்கியதால் மிகப்பெரிய நெருக்கடிகள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment