சந்திரனுக்கு ரோபோ ஒன்றை அனுப்ப இஸ்ரோ தயாராகி வருவதாக பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி ஏ.சிவதாணுபிள்ளை தெரிவித்துள்ளார். இந்தியா சந்திரனில் மனிதனை அனுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது 2021 இறுதியில் விண்வெளிக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு இருக்கிறது.
உலக நாடுகளின் பட்டியலில் விண்வெளிக்கு ராக்கெட் ஏவுவதில் இந்தியா இன்று 4வது இடத்தில் உள்ளது. தற்போது சந்திரனில் மனிதனை அனுப்புவதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. அதன் முயற்ச்சியாக விரைவில் ரோபோ ஒன்று அனுப்பபடுகிறது. இந்த வருடம் இந்த பணிகள் முடிவடையும்.
சந்திரனில் ஹீலியம் வாய்வு அதிகமாக காணப்படுகிறது. இது அரிய வகை மூல பொருளாகும் என தகவல் கிடைத்திருக்கிறது. ஒரு கிராம் ஹீலியம் வாயு 1000, யுரோனியத்திற்கு சமமானதாகும் ஹீலியம் கதிர்வீச்சற்றது. இது பல வகைகளில் மக்களுக்கு பயன்படும். ரோபா அங்கிருந்து ஹீலியமை சேகரித்து இது பூமிக்கு பாதுகாப்பாக கொண்டு வரும். அதை இஸ்ரோ ஆராய்ச்சி செய்யும். அதன் பின் மனிதனை சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதில் இஸ்ரோ செயல்படும்.
No comments:
Post a Comment