பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு தினங்களுக்கு முன்பாக உயர்நீதிமன்றம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஜனவரி 25ஆம் தேதி பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி இன்று அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்புவார்கள் என பொதுமக்களும் மாணவர்களும் எதிர்பார்ப்புடன் காத்துக்கிடக்கின்றன.
தற்சமயம் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பிப்ரவரி முதல் வாரத்தில் செய்முறை தேர்வு, மார்ச் முதல் வாரத்தில் பொது தேர்வை எதிர் நோக்கியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வில்லை என்றால் தங்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ என்ற அச்சத்தில் ஏழை மாணவர்கள் வருத்தத்துடன் உள்ளன. கோட்டு உத்தரவிட்டதை அடுத்து என்று பள்ளிக்கு ஆசிரியர்கள் பணிக்கு திரும்புவார்கள் என மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனின் பெற்றோர் ஒருவர் கூறுகையில் கை நிறைய சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் இதுபோன்று தேர்வு நேரத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தவறு எனவும். உண்மையில் அவர்கள் தேவையை பூர்த்தி செய்யவில்லை என்றால் மாலை நேரம் அல்லது விடுமுறை நாட்களில் இவர்கள் தங்களுடைய போராட்டத்தை தொடர்ந்து இருக்கலாம். இவர்களுக்கு மாணவர்களின் மீது எந்த அக்கறையும் இல்லை தங்களுடைய குடும்பத்தையும் சுகத்தை மட்டுமே எதிர்பார்த்து இருக்கின்றன என வேதனை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில் எனது மகன் இந்த வருடம் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள நிலையில் அவனை தயார் படுத்த வேண்டிய ஆசிரியர்கள் தற்சமயம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அவனால் எவ்வாறு தேர்வு சிறப்பாக எழுத முடியும் எதிர்காலத்தில் சிறந்த கல்வியை எவ்வாறு அவன் பெற முடியும் என வினவியுள்ளார்.
மேலும் அவர் இவர்களது குழந்தைகள் கற்கும் கல்வி நிறுவனங்களில் இவ்வாறு பள்ளி மூடப்பட்டு இருந்தாலும் அல்லது சரிவர செயல்படவில்லை என்றால் அவர்களால் பொறுத்துக் கொள்ள இயலுமா. வசதி வாய்ப்பு இல்லாத காரணத்தினால் எங்களது பிள்ளைகளை நாங்கள் அரசு பள்ளியில் படிக்க வைக்கின்றோம். எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி நாங்கள் மிகுந்த வேதனை அளிக்கிறது. எனவே ஆசிரியர்கள் மிக விரைவில் பள்ளிக்கு திரும்ப வேண்டும் எங்களது குழந்தைகளுடைய எதிர்காலக் கனவை அவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment