"

Sunday, January 27, 2019

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நிலையும் ஆசிரியர்களின் போராட்டமும்...! என்ன செய்யப்போகிறது தமிழக அரசு..?




கடந்த 4 நாட்களாக தொடர்ந்து போராட்டம் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், அரசின் எந்தவிதமான மிரட்டல் போக்கிற்கும் தாங்கள் அஞ்சப்போவதில்லை என கூறியுள்ளனர்.

தங்களின் கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டால் மட்டுமே நாங்கள் பணிக்கு திரும்புவோம். இல்லை என்றால் எங்கள் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். மேலும் எஸ்மா டெஸ்மா போன்று சட்டங்களை கொண்டு எங்களை மிரட்டி பணியவைக்க முடியாது. அரசு அளித்த வாக்குறுதியின்படி எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட  வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ள தகவலின்படி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக விரைவில் நல்ல செய்தி வரும் என தெரிவித்துள்ளார். ஆனால் இன்று மீண்டும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் வருகின்ற மார்ச் மாதம் பொதுத் தேர்வு எழுதவுள்ள 10வது 11வது மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். எவ்வாறு தங்கள் தேர்வை எதிர் நோக்குவது தேர்வுக்கான பயிற்சிகளில் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் இல்லாத காரணத்தினால் தங்களுடைய எதிர்கால கல்வி வீணடிக்கப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களின் பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகளின் படிப்பு கேள்விக்குறியாக உள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளனர். தங்களின் பிள்ளைகளின் நலனை பற்றி ஆசிரியர்களோ அல்லது அரசோ எந்தவிதமான ஒரு முடிவை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருவது மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிப்பதாக கூறி வருகின்றன.


சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் அரசின் இத்தகைய செயல் மிகவும் வேதனையளிக்கிறது. ஆசிரியர்களை அழைத்து பேசி அவர்களை மீண்டும் பள்ளிக்கு வர செய்வதில் அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது என தெரியவில்லை. மாணவர்கள் பொது தேர்வு எழுத எதிர்நோக்கி இருக்கக்கூடிய காலகட்டத்தில் அரசு இவ்வாறு செய்வது மிகுந்த வேதனை அளிக்கிறது. மிக விரைவில் அரசு பேச்சுவார்த்தை நடத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப செய்ய வேண்டியது அரசின் கடமையாகும் என தெரிவிக்கின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்களும் தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதிய கோரிக்கையை பரிசீலனை செய்து மிக விரைவில் அவர்களை பணிக்கு திரும்ப செய்ய வேண்டும். பள்ளி மாணவர்களின் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Adbox